ஞாயிறு, 22 நவம்பர், 2020

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் 22 பேர் அடையாளம் தெரிந்து கண்டு பிடிப்பு !!! இன்று 8 இடங்களில் நடந்த சிறப்பு விசாரணை!!!

 தூத்துக்குடி லீக்ஸ் 22.11.2020*


தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் (Missing Person) பற்றிய வழக்குகளுக்காக இன்று 8 சிறப்பு முகாம்கள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் 22 பேர்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தெரிவித்தார்.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்த  காணாமல் போனவர்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து கண்டு பிடிக்க 8 சிறப்பு முகாம்கள் அமைத்து இன்று (22.11.2020) விசாரனை நடைபெற்றது.


இதில் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் நிலுவையிலிருந்த 56 வழக்குகளுக்கு 17 வழக்கின் மனுதாரர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர், இந்த சிறப்பு முகாம் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில்  2 வழக்குகளில் காணாமல் போனவர்கள் 3 பேர் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.*


தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 16 வழக்குகளுக்கு 10 மனுதாரர்கள் கலந்து கொண்டனர், இதில் ஒருவரின் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 43 வழக்குகளுக்கு 15 மனுதாரர்கள் கலந்து கொண்டனர், இதில் 4 பேர் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 13 வழக்குகளுக்கு 9 மனுதாரர்கள் கலந்து கொண்டனர், இதில் 4 பேர் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.*


மணியாச்சி உட்கோட்டத்தில் 6 வழக்குகளுக்கு 6 மனுதாரர்கள் கலந்து கொண்டனர், இதில் ஒருவரின் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கோவில்பட்டி உட்கோட்டத்தில் 32 வழக்குகளுக்கு 21 மனுதாரர்கள் கலந்து கொண்டனர், இதில் 4 பேர் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


விளாத்திக்குளம் உட்கோட்டத்தில் 17 வழக்குகளுக்கு 6 மனுதாரர்கள் கலந்து கொண்டனர், இதில் 4 பேர் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 18 வழக்குகளுக்கு 13 மனுதாரர்கள் கலந்து கொண்டனர், இதில் 2 பேர் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மொத்தம் காணாமல் போனவர்கள் குறித்து பதிவு செய்யப்பட்டு நிலுவையிலிருந்த 201 வழக்குகளின் மனுதாரர்கள் 97 பேர் கலந்து கொண்டனர். அதில் 22 பேர் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக