தூத்துக்குடியில் ஆட்டு உரல் கல் பயணிகள் வரும் நடைபாதையில் வரினசயாக அடுக்கிவைத்து ஆதிகாலத்து பஸ்ஸாடாண்ட் ஆக கடந்த வாரம் தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் மாறி போயுள்ளது.
24ஆம் புலிகேசி வடிவேலு பாணியில்
நவீனமாக ஜடியா கொடுத்த நபர் யாராக ... இருக்கும் பயணிகள் மிரட்சியில் அரண்டு போயுள்ளார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இருக்கிறது?
அந்த திட்டத்தில் பல கோடி ஒதுக்கி...தூத்துக்குடி மாநகரை சிங்கப்பூர் சிட்டியாக மாற்றும் முயற்சியாக அறிவியல் பூங்காக்கள், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் இடித்து தரைமட்டமாக்கபட்டு அடுக்கு மாடி ஸ்மார்ட் பேருந்து நிலையமாக கட்டப்பட்டு அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவிருக்கிறார்.
இப்படி நல்ல அறிவுபூர்வமான முயற்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆனைையர் அவர்களும் அதிகாரிகள் வட்டாரமும் பிரத்த னப்பட்டு பாடுபட்டு வருகிறார்கள்.
தூத்துக்குடி யில் பழைய - புதிய பேருந்துநிலையங்களில் நவீன இருசக்கர காப்பகம்-இலவச கழிவறை போன்ற கொஞ்சம் கூட நினைத்து பார்கக முடியாத அளவு முன்மாதிரி செயல்களை மாநகராட்சி ஆனையர் ஜெயசீலன் அதிரடி உத்தரவு மூலம் சாதித்து உள்ளது தூத்துக்குடி மாநகராட்சி,
தற்போது தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பஸ்கள் முன்பிருந்த எதிர்பகுதியில் தற்காலிக பேருந்து நினலயம் என இயங்கிவருகிறது.
அதேபோல தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பெயர் முகப்பு சுவர் சமீபத்தில் இடிந்துவிழுந்தது. அதன் பின்பு பெயர் அப்பகுதியில் எழுதப்படவில்ல நுழைவு பகுதியில் டுவிலர் மற்றும் வாகனம் நுழைகிறது என்று புதிய பேருந்து நிலையம் சுற்றி 100 - க்கும் மேற்பட்ட மாவு ஆட்டும் பழைய ஆட்டு உரல் கல்- களை வழியில வரிசையாக அடுக்கி விட்டார்கள்.
இது எந்த புலிகேசி கொடுத்த ஜடியா? என பயணிகள் மிரண்டு போய் இருக்கிறார்கள். கிராம பஸ்ஸாடான்ட் - லகூட இப்படி மட்ட ரகமாக சிந்தித்து இருக்க மாட்டார்கள்
ரயில்வே கிராசில மக்கள் மட்டும் நுழைவது போல கம்பி வளைவு பூங்கா க்கள் - உள்நுழையும் கம்பி வளைவு போலவோ அமைத்திட வேண்டும்
இப்படி வரிசையாக ஆட்டு உரல் கல் வைக்கப்பட்டு இருப்பது ...? முதிர்ந்த பயணிகள் - மற்றும் அப்குதி டாஸ்மார்க் குடிமகன் கள் மண்டை உடைய கூடும் அப்பகுதி பஸ் பயணிகள் மற்றும் கடை வியாபாரி கள் கவலைப்படுகின்றனர்
இது போல
தூத்துக்குடி புதிய பஸ்ஸாடாண்டில் பயணிகள் அமரும் இருக்கைகள் அனைத்தும் உடைந்த நிலையில் கிடக்கிறது.
மேலும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வளாகம் முழுவதும் ஒரு கும்பல் பயணிகள் நடக்க முடியாதபடி தரையில் கடை பரப்பி உள்ளார்கள். நாஸ்தி பண்ணி வருகின்றனர்.
மேலும் சிறு குழந்தைகள்....பலர் குழந்தை தொழிலாளியாகவும் பிச்சையும் எடுத்து கொண்டு இருக்கிறார்கள். உள்ளே நடக்க இயலாத ஆதரவற்ற முதியவர்கள அங்கே உண்று கழிந்து வருவதும் அப்பகுதி சுகாதார மற்ற நினலயில் இருக்கிறது. ஆட்டு உரல் கல் ஆக மாறி இருக்கும் ஆதிகாலத்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக