தூத்துக்குடி லீக்ஸ் 28.10.2020
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 16 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு!!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் தொலைந்து போன மற்றும் தவறவிட்ட 102 கைபேசிகளை கண்டு பிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர் பெர்லின் பிரகாஷ் மற்றும் காவலர்கள் பேச்சிமுத்து, மகேஷ்குமார், . வசந்தபெருமாள் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணியாற்றியுள்ளார்கள்.
தாளமுத்து நகர் காவல் நிலைய போக்ஸோ வழக்கில், சம்மந்தப்பட்ட எதிரிக்கு ஆயுள்தண்டனையும் ரூ. 5,000/- அபராதமும் பெற்று தந்த தாளமுத்து நகர் காவல் நிலைய தலைமைக் காவலர் கணேசன், காவலர் பன்னீர் செல்வம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணியாற்றியுள்ளார்கள்
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய புதுக்குடியை சேர்ந்த முத்து செல்வி (23) என்பவர் தனது 10 கிராம் தங்க சங்கிலியை ஸ்ரீவைகுண்டம் கூட்டுறவு வங்கியில் அடகு வைப்பதற்காக வந்த போது தவறவிட்டுள்ளார். அதை கால்வாய் கிராமத்தை சேர்ந்த நடராஜன்(60) என்பவர் எடுத்துச் சென்றதை சி.சி.டி.வி கேமரா மூலம் கண்டுபிடித்து அவரிடமிருந்து நகையை கைப்பற்றி உரியவரிடம் ஒப்படைத்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய காவலர்கள் திரு. முருகன் மற்றும் நித்தியானந்தம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணியாற்றியுள்ளார்கள்.
கடந்த 20.10.2020 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்டப்பட்ட மீளவிட்டான் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 4 பேரை கைது செய்த சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர், மத்திய குற்றபிரிவு உதவி ஆய்வாளர் ராஜபிரபு, சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் கலைவாணர், முதல் நிலைக் காவலர் சுப்பிரமணியன், ஆயுதப்படை காவலர்கள் சக்தி மாரிமுத்து, டேவிட் ராஜன் மற்றும் அய்யப்பன் ஆகியோரின் மெச்சதகுந்த பணியாற்றியுள்ளார்கள்
காவல் ஆய்வாளர் உட்பட 16 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன் உடனிருந்தார்.










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக