வெள்ளி, 12 ஜூன், 2020

சாயர்புரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி புதிய அலுவலக கட்டிடம் திறப்பு... அமைச்சர் கடம்பூர்.செ.ராஜு மற்றும் S.P.சண்முகநாதன் எம்.எல்.ஏ அன்றையதினமே பயனாளிகளுக்கு ரு 75 லட்சம் கடன் உதவி வழங்கல்!!!

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியின் ரூபாய் 25 லட்சம் மதிப்புடைய.....
புதிய அலுவலக கட்டிடத்தை 2020. ஜூன் 12 இன்று காலை 11 மணியளவில்,திறந்து வைத்து,  உடன் பயனாளிகளுக்கு ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை மாண்புமிகு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு அவர்களும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் பி.சின்னப்பன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் முன்னாள் எம்எல்ஏ மோகன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், சிவத்தையாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் குணசேகரன் கூட்டுறவு மண்டல இணை இயக்குனர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக