அதில் அவர் தெரிவித்திருந்தாவது :-
வல்லுனர் குழு நமது கோரிக்கைகளின் நியாயங்களை உணர்ந்தவர்களாக நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி
தூத்துக்குடிசிப்காட் வளாகத்தில் திட்டமிடப் பட்டிருந்த தொழிற்பூங்கா குறித்து 26.05.2020 அன்று நடந்த வல்லுனர் குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப் பட்டு வல்லுநர் குழு இந்த திட்டத்தைத் திரும்பப் பெற அறிவுறுத்தியுள்ளது. இது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒர் முடிவு.
மீளவிட்டான் பகுதியில் அமைந்துள்ள SIPCOT வளாகத்தில் செயல்பட்டுவந்த Sterlite தாமிர உருக்காலையால்
தொடர்ந்து ஏற்படுத்திய காற்று மாசுப்பாடு எல்லை கடந்த விதமாக சீர்கேட்டினை உருவாக்கியதால் நடந்து வந்த எதிர்ப்பு போராட்டம் மே 22, 2018 இல் ஒரு உச்ச கட்டத்தை தொட்டு 16 பேர் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார்கள். பலர் படுகாயமடைந்தார்கள்.
தற்பொழுது, அதே இடத்தில் ஒரு தொழிற்பூங்காவை நிறுவத் திட்டமிடப்பட்டிருப்பது அறிந்து அதிர்ச்சியடைந்தோம். தூத்துக்குடி படுகொலை நடந்து இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் இந்த வேளையில், அந்த பூங்காவில் 10 MMTPA petroleum refinery, கூடவே,2 MTPA Petrochemical Plant அமைக்க தயார் நிலை உருவாகியிருந்தது.
தூத்துக்குடி ஏற்கனவே கடுமையான சுற்றுசூழல் பாதிப்புக்கு உள்ளான பகுதி. இதன் முழுமையான சுற்றுச்சூழல் தாக்க அளவு கணிப்பின் படி 10.07.2017 இல் மிக அதிக அளவில் (66.34 ) உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாசுபடுத்தக் கூடிய ஆலைகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பதால் பகுதி மக்களின் ஆரோக்கியமும் வாழ்க்கை தரமும் மிகவும் பாதிக்கப் பட்ட நிலையில் உள்ளன.
SIPCOT எனும் விண்ணப்பதாரரால், திட்டமிடப் பட்டிருக்கும் இந்த தொழிற்பூங்கா பகுதிக்கு அருகில் ஏற்கனவே விதிமுறைக்கு இணங்காத Industrial Estate ஒன்று செயல்பட்டு வருகிறது. எனவே திட்டமிடப் பட்டிருக்கும் இந்த பூங்கா இங்கு நிறுவப்படக்கூடாது என்று விண்ணப்பதாரரின் விண்ணப்பத்தில் இருக்கக் கூட குறைபாடுகளையும் அபாயங்களையும் சுட்டி காட்டி
The Members of Expert Appraisal Committee
Ministry of Environment, Forests & Climate Change
Via: Email
அவர்களிடம் இந்த திட்டத்தைத்
தடை செய்யவேண்டி கோரிக்கை வைத்திருந்தோம். அதன் பலனாக இன்று வல்லுனர் குழு இந்த திட்டத்தை திரும்பப் பெற அறிவுறுத்தியிருக்கிறது.

வழக்கமாக அரசுகள் பெருந்திட்டங்களைக் கொண்டு வரும் போது, அதனை மக்கள் கவனத்துக்கு கொண்டு வராத வகையிலே பார்த்துக் கொண்டு, அதன் பிறகு மக்கள் புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கும் போது ஆரம்பத்திலேயே சொல்லாமல், இவ்வளவு செலவுகள், இவ்வளவு பணிகள் முடிந்த பின் சொல்வது முறையல்ல என்று மக்களைக் குற்றவாளிகள் ஆக்கும் போக்கு ஆட்சியாளர்களின் (அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி) தனிதன்மையாக இருந்து வந்திருக்கிறது. ஏற்கனவே அனுமதியில்லாத இடத்தில் ஒரு சிவப்பு தர ஆலையை வைத்து அதன் விளைவாக பல பாதிப்புக்கு உணர்ந்தவர்கள் நாங்கள். மீண்டும் அதே போல் நடந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வில் தான் அனைத்து பொறுப்பாளர்களின் கவனத்துக்கும் இந்த தொழிற் பூங்காவின் தொடக்க நிலையிலேயே கொண்டு சென்றோம்.
வல்லுனர் குழு நமது கோரிக்கைகளின் நியாயங்களை உணர்ந்தவர்களாக நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி
இவ்வாறு தூத்துக் குடி மக்கள் மற்றும் களப் போராளிகளால் தூத்துக்குடி அக்கா என்று அழைக்கபபடும்
போராசிரியை பாத்திமா பாபு அவர்கள்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக