திங்கள், 15 ஜூன், 2020

தேவேந்திர குல வேளாளர் தலைவர் பசுபதி பாண்டியன் நினைவு மண்டப அடிக்கல் தொடர்பாக தூத்துக்குடி காவல்துறை வழக்குபதிவு!!! தாழை முத்துகாவல்நிலையம் முற்றுகை பரபரப்பு!!!

மறைந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் நினைவு மண்டப அடிக்கல் தொடர்பாக தூத்துக்குடி காவல்துறை வழக்குபதிவு  செய்ததாகவும் இதுதொடர்பாக அமைப்பினர் 
தாழை முத்துகாவல்நிலையம் முற்றுகை பரபரப்பு கிளம்பியது இதையொட்டி அப் பகுதி முழுவதும்   ேபாலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு புகைப்படம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு
 பசுபதி பாண்டியன் நினைவு மண்டப அடிக்கல் நாட்டியது தொடர்பாக விதிமுறை மீறிய வழக்கு பதிவினை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் காவல் நிலைய முற்றுகை என அறிவித்தாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் அருகே உள்ள அலங்காரதட்டில் பசுபதி பாண்டியனின் நினைவு மண்டபம் கட்டுவதற்கு அரசு அனுமதி எதுவும் பெறப்படாமல் பணிகள் துவங்கியதால் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது .

எனவே இன்று வழக்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் காவல் நிலைய  ஆய்வாளரை கண்டித்து இன்று  தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பினர் மற்றும் சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் என  அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

எனவே இன்று தாளமுத்துநகர் மாதா நகர் சவேரியார்புரம் டேவிட்புரம் ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக