வெள்ளி, 5 ஜூன், 2020

ஜெய் ஸ்ரீராம், சொல்ல மறுத்த முஸ்லிம் இளைஞர் நாக்கை கத்தியால் அறுக்க முயற்சி ? காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !


ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

பீகார் மாநிலம் , சம்பரன்  என்கிற கிராமத்தை சேர்ந்த முகமத் இஸ்ரேல் என்ற  இளைஞரை ஜெய் ஸ்ரீ ராம்"ன்னு சொல்ல கட்டாய படுத்தி உள்ளனர் சொல்ல மறுத்தனால் ஆத்திரமடைந்த இந்த சமூக விரோதி கும்பல் இஸ்லாமிய இளைஞரை, சரமாரியாக தாக்கியதுடன், கத்தியால் அவரது நாக்கை அறுக்க முயன்றுள்ள சம்பவம் இஸ்லாமியர்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது . 

ஜீன் 2 இவரது கிராமத்தில் மழை பலமாக இருந்ததால் மின்சாரம் இல்லாதனால் செல்போனில் சார்ஜ் இல்லை என்தால் தனது நண்பர் வீட்டிற்கு செல் போன் ஜார்ஜ் போட சென்றிருக்கிறார் அப்போது தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

மேலும்  ரத்த வெள்ளத்தில் கிடந்த முகமது இஸ்ரேலை மீட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது . இந்த நிலையில் முகமது இஸ்ரேல் வாக்கு மூலம் ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொன்னாங்க நான் சொல்ல மறுத்தனால் என்னை தாக்கியும் எனது நாக்கை அறுக்க முயன்றுள்ளனர் என்று அம்மாநில காவல் துறையிடம் அவரது வாக்கு மூலத்தை கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் இச்சம்பவம் குறித்து அம்மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர் . மேலும் முகமது இஸ்ரேல் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கோபால்,ராகுல் பன்வரிலால், லாகான்,பிரின்ஸ்,அபிஷேக்,நிதிஷ்சிங்,ஆகியோரை காவல் துறை உடனடியாக கைது செய்து இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது  .

வடமாநிலத்தில் ஓரு சில இடங்களில் பசு பாதுகாப்பு  என்ற பெயரில் இஸ்லாமியர்கள், தலீத்துக்கள்,மீதும் கொலை வெறி தாக்குதல் மற்றும் படு கொலைகள் நடந்துள்ளன. அதோ போல் ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி கட்டாய படுத்தி வருகின்றனர் சொல்ல மறுப்போரை கொலை வெறி தாக்குதல் நடத்தி வரும் சமூக விரோதி கும்பலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கன்டிக்கிறது.

எனவே  : இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுத்து இஸ்லாமியர்களின் பாதுகாப்பை பீகார் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக