ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது . மேலும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குக் கட்டண விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 கட்டணம் வசூலிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்கிறது .
தமிழகத்தில் வாழக்கூடிய மக்களுக்கு கொரோனா தொற்று நோயிலிருந்து பூரண குணம் அடைவதற்க்கும் மற்றும் அதற்க்கான செலவினங்களை அரசு ஏற்றுக்கொள்ளும் வகையில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிவித்த மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் மற்றும் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்களுக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .
மறைந்த புரட்சி தலைவி அம்மா அவர்கள் விட்டு சென்ற பல்வேறு மக்களுக்கான நல திட்டங்களை முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மற்றும் துனை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் இனைந்து திட்டங்களை நடை முறைபடுத்தி வருகிறார்கள். மேலும் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளை அரசு எடுத்து வருகிறது . மேலும் மக்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொலை நோக்கு பார்வையுடன் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது .
மேலும் அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.9,000 முதல் ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் எனப்பட்டுள்ளது. மேலும் முதல் அமைச்சர் காப்பீடு திட்ட பயனாளிகள் தனியார் மருத்துவ மனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும் நிர்ணயிக்கபட்ட கட்டணத்திற்கு மேலாக தொகையை செலுத்த கோரினால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கபட்டுள்ளது . மேலும் அரசின் இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது .
மேலும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் கொரோனா தொற்று நோயினால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கபடுகிறார்கள் . இதில் முதல்வர் மருத்துவ காப்பீடு அட்டை உள்ளவர்கள் . தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் பயன் பெறுவார்கள் ஆனால் முதல்வர் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாதவர்கள் தனியார் மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சை பெறமுடியாமல் பாதிக்க படுகிறார்கள் .
எனவே : முதல்வர் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாதவர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை கிடைக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக