செவ்வாய், 23 ஜூன், 2020

தூத்துக்குடியில் 3500 தமிழ்நாடுஅரசுபோக்குவரத்து.கழக தொழிலாளர்களுக்கு செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ மற்றும் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முக கவசம் - கை உறை வழங்கல்!!!.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஏற்பாட்டில் தமிழ்நாடுஅரசு போக்குவரத்து கழக 3500 தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்களுக்கு கை உறை, முக கவசம் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு வழங்கினார்.
        தமிழக முதலமைச்சர் உத்திரவுபடி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் எஸ்.பி.சண்மு நாதன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் தூத்துக்குடி மாவட்ட மண்டல தமிழ்நாடு.அரசு போக்கு வரத்து கழக தூத்துக்குடி தொழிலாளர்களுக்கு கை உறை, முக கவசம் வழங்கினார்கள்.

 தூத்துக்குடி டூவிபுரம் 7 வது தெருவில் உள்ள அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகம் முன்பு நடை பெற்ற
 நிகழ்ச்சியில் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
         தூத்துக்குடி மாவட்ட மண்டல த.அ.போ.க.பொது மேலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.
       3500 த.அ.போ.கழக தொழிலாளர்களுக்கு செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செராஜூ கை உறைமுக கவசம் வழங்கினார்.
     நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன், த.சு.போ.க. டிவிசனல் மேலாளர் கண்ணன் நகர, புறநகர் கிளை மேலாளர்கள் ஜேக்கப், பாஸ்கர், த.அ, போ.க. அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கல்வி குமார், தொப்பை கணபதி, ஆதிராஜ் வெள்ளையாலிங்க பாண்டி, திருமணி, முத்துகுமார், உதயகுமார், வீரபாகு ஊர்காவல பெருமாள், பொன்ராஜ், ராஜகுமார், லட்சுமணன், சக்திவேல், வீரபாண்டி, ஞானதுரை, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்ராஜா மாவட்ட பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இனண செயலாளர் சத்யா இலட்சுமணன், மாவட்ட இலக்கிய அணி நடராஜன், மாவட்ட தகவல் பிரிவு சோபன், சகாயராஜ், மகளிர் அணி செயலாளர் குருத்தாய், செரீனா, பகுதி செயலாளர் பொன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், வழக்கறிஞர்கள் வீரபாகு, முனியசாமி சந்தன பட்டு, குருசாமி, செந்தில் முருகன், பத்மநாபன் உட்பட திரளான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொன்டனர்.

       இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ சிறப்பாக செய்து இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக