பேட்மாநகரத்தில் கால்நடை
மருத்துவமனை விரிவாக்க கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் திறந்து வைத்தார்.ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்திலுள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கான மருந்து கட்டும் அறை, மருந்து சேமிப்பு அறைகள் ரூ.31லட்சத்து 50ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்புவிழா இன்று காலை10.30 மணியளவில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சத்யநாராயணன் தலைமையில் நடந்தது.
கால்நடை மருத்துவர்கள் சுரேஷ், சங்கரநாராயணன், செல்வக்குமார், சந்தோஷம், முத்துக்குமார், ஏஞ்சலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக