வியாழன், 7 மே, 2020

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், சார்பாக பரபரப்பு அறிக்கை!! Press News!!!

தூத்துக்குடி வட்டார மக்களின் வாழ்வுரிமையை நாசப்படுத்திய உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் நச்சாலைக்கு எதிராக,....

கடந்த  மே-22, 2018 அன்று நடைபெற்ற பெருந்திரள் மக்களின் அறவழிப் போராட்டத்தில், அரசப் பயங்கரவாதத் தாக்குதலால் 15 பேர் கொல்லப்பட்டதையும், அன்று நடைபெற்ற
*கொடுர நிகழ்வுகளையும்* *தொலைக்காட்சிகளில் பார்த்தப் பிறகே அறிந்த தமிழக முதல்வர் அவர்களே,

இக்கொடுர நிகழ்வுகளுக்கு பிறகு தூத்துக்குடியில் நீர், நிலம், காற்று என ஒட்டுமொத்த உயிர்ச்சூழலும் ஸ்டெர்லைட் நச்சாலையால் மிக அபாயகரமான அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அறிவித்து, தங்களின் தலைமையிலான தமிழக அரசு ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடியதோடு,  நீதிமன்றங்களில் அதற்கான சான்றுகளை முன்வைத்து வாதிட்டு வருவதை தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள் வழியாக மக்களும் அறிவார்கள்!*

*இந்நிலையில் கொரோனா தொற்று நோய் பேரிடர் நிவாரண நிதியாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் நச்சாலை நிர்வாகத்திடம் இருந்து தங்கள் தலைமையிலான 
தமிழக அரசே
நிவாரண நிதியாக
ரு.5 கோடி பெற்றுள்ளது!

இதனை முன்னுதாரணமாக வைத்து, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சாலை நிர்வாகத்தின் அராஜக போக்கு  உச்சநிலைக்கு எட்டியுள்ளது


  தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்!*
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற பகுதிகளில் நிவாரணம்" என்ற பெயரில் மக்களின் விருப்பத்திற்கு புறம்பாக,* *மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்* *ஸ்டெர்லைட் நிர்வாகம்* *மக்களுக்கு உதவி செய்கிறோம்*
*என்ற பெயரில் கட்டாயத் திணிப்புக்குள்ளாக்க நினைக்கிறது.*

*இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் தங்களுக்கு சாதகமான காவல்துறை துணைக் கொண்டு பொய் வழக்கு தொடுப்பதும், தங்களுக்கான சில கைக்கூலிகளை கொண்டு மக்களை தாக்கும் முயற்சியிலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆணவப் போக்கோடு ஈடுபட்டு வருகிறது.*

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியை சார்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி திரு முத்து அவர்கள் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

ஆ.குமரெட்டியாபுரம் கிராமத்தை சார்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி வெள்ளத்தாய் அம்மாள் மீது பொய் வழக்கு புனையபட்டு விசாரனை என்ற பெயரில் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்.*

பண்டாரம்பட்டி கிராம ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் தாக்கப்பட்டுள்ளனர்.* 

இந்த சட்டவிரோத செயல்பாடுகளை தூத்துக்குடி
*மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் தன் கடமையிலிருந்து விலகி வேடிக்கை பார்ப்பது மட்டுமின்றி ஒரு சில அரசு அதிகாரிகள் ஸ்டெர்லைட்டின் தொடர் அராஜக போக்கிற்கு துணை போவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.*

*ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் தன்னார்வமாக அரசிடம் முறையான அனுமதி கோரிய பின்னரும், துயருறும் மக்களுக்குத் தேவையான உதவிகளை, நலத்திட்டங்களை செய்ய தடுக்கப்படுகிறார்கள்.*
தனி மனித உரிமை மீறலின் உச்சமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும், நண்பர்களும் காவல் துறையால் கண்காணிப்பு என்ற பெயரில் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

தமிழக அரசே! முதல்வர் அவர்களே!

ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட"கொரோனா நிவாரண நிதி"
ரூ.5 கோடியை வேதாந்தா குழுமத்திடமே திருப்பிக் கொடுத்திடுக

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுக!
*ஸ்டெர்லைட் நச்சாலைக்கு சாதகமாக செயல்படும் அரசு அதிகாரிகளின் மக்கள் விரோத  செயற்பாடுகளை நிறுத்துக! கேடுற்ற அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திடுக!*
*வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நிர்வாகம் சமூகப்பணி என்றப் பெயரில் "சட்டஒழுங்கையும், மக்களின் அமைதியையும் சீர்குலைக்கும் நயவஞ்சக செயற்பாடுகளை தடை செய்திடுக!*
*ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை*
*சமூக விரோதிகளாக சித்தரிக்கும் பொருட்டு கண்காணிப்பு என்ற பெயரில் நடைபெறும் காவல்துறையின் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்துக!
---------------------------------------------------
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், தூத்துக்குடி.'

இவ்வாறு தெரிவித்துள்ளார்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக