தூத்துக்குடியில் மொட்டை மாடியில் பலத்த காயங்களுடன்
இறந்து கிடந்த கட்டிடதொழிலாளி உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தூத்துக்குடி அண்ணா நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர்
சௌந்தரபாண்டியன் மகன் சரவணன் (47) கட்டிட வேலை செய்துவந்தார். இவருக்கு மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.நேற்று இவரது வீட்டின் அருகே மின் வயர் அறுந்து தொங்கியது. இதையடுத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் மைதீன் என்பவரிடம் மின்வாரிய அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை கேட்டுள்ளார். அப்போது சரவணன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் டூவிபுரம் 2வது தெருவில் உள்ள வணிக வளாகத்தில் மொட்டை மாடியில் சரவணன் இன்று பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் நடந்த தகராறு காரணமா? கொலை செய்யப்பட்டரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக