வியாழன், 21 மே, 2020

போலீஸ் பலத்த பாதுகாப்பு பணி!!! தூத்துக்குடி துப்பாக்கி சூடு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்!!!! வைகோ-திருமா- கனிமொழி MP உட்பட பலர் மே - 22 இன்று மாலை பேஸ்புக்- யூடிப் - பில் நேரடி ஒளிபரப்பு உரையாற்றல் !!!!

தூத்துக்குடியில் கடந்த 2018 - மே 22-அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டது. 15- பேர் உயிரழந்தார்கள். தூத்துக்குடியில் இன்று இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்த படுகிறது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் மூலம் தூத்துக்குடி பகுதியில் டாஸ்மார்க் முடப்பட்டுள்ளது.

காவல்துறை கண்காணிப்பாளர் 14 4 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதால் எந்த அமைப்போ அரசியல்வாதிகளோ நினைவு அஞ்சலி நிகழ்வில் சம்பந்தபட்ட குடும்பம் தவிர்த்து கலந்து கொள்ளவும் கூட்டம் கூடவும்  அனுமதி கிடையாது. என்று காவல்துறை மூலம் கடும் எச்சரிக்கை நேற்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது

 இதையொட்டி தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் போலீஸ் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஆண்- பெண்போலீஸ். நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் - மக்கள் கண்காணிப்பகம் முயற்சியில் தங்களது இருப்பிடத்தில்  இருந்த வாறு பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு தலைவர்கள் பீப்பிள் வாட்ச் பக்கம்  பேஸ்புக்-யூடிப் மூலம் இன்று மே 22 மாலை 5.40 முதல் இரவு 10 மணிவரை
தங்கள் இருப்ப்பிடத்தில்  இருந்தவாறு ஒவ்வொருவராக Facebook  peoples watch.org மற்றும் youtube peoples watch - என்ற page-ல் நேரடி ஒளிபரப்பு மூலம் உரையாற்றுகிறார்கள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்...நீதிக்கான குரல் எனும் தலைப்பில் பேசுகிறார்கள்

  ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்
ஒருங்கிணைப்பாளர் போராசிரியை பாத்திமா பாபு இன்று மாலை 5.40 மணிக்கும்,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் மாலை 5.45. மணிக்கும்,
மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்கு நர் ஹென்றி திபேன் மாலை 5.50 - மணிக்கும்..
மக்களவை உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் மாலை 6.00 மணிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் மாலை 6.40 மணிக்கும், மாநிலங்களவை உறுப்பினர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தலைவர் வை.கோ இரவு 7.00 மணிக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் இரவு 7.20 மணிக்கும், திராவிட முன்னேற்ற கழகம் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் மு.க. கனிமொழி இரவு 7.40 மணிக்கும் ,எஸ்டிபிஐ சோஷியல் டெமோசிட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் இரவு 8.20 மணிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில தலைவர் தோழர் இரா.முத்தரசன், இரவு 8.40. மணிக்கும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் போராசிரியர் ஜவாஹிருல்லா இரவு 9.00 மணிக்கும், பீப்பிள் வாட்ச்சஸ்  பேஸ்புக்-யூடிப் - ல் நேரடியாக ஒருவர் பின் ஒருவராக பேச இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக