சனி, 23 மே, 2020

மத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம்!!!

பத்திரிகை செய்தி.

மத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டது. 


அதனடிப்படையில் இன்று (23.05.2020) தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் முன்பு AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் செண்பகராஜா, தோழர்கள் சுப்பிரமணியன், பலவேசம், ஜீவா, முனியசாமி,சேகர் உட்பட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

¤ *மத்திய அரசு இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு சட்டத்தை நிறைவேற்று.*

¤ *பணி ஓய்வு வயதினை உயர்த்திய அரசாணையை இரத்து செய்.*

¤ *பொதுதுறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே.!*

¤ *தொழிலாளர் நலச் சட்டங்களை சீர்குலைக்காதே.!*

¤ *புலம் பெயர்ந்த தொழிலாளர்களை இரயில் கட்டணமின்றி போதிய உணவு வழங்கி சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடு.!*
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இப்படிக்கு
*பெ.சந்தனசேகர்*(வழக்கறிஞர்),
மாவட்ட செயலாளர்
*அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்.*
தூத்துக்குடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக