சனி, 16 மே, 2020

திருச்சியில் செய்தியாளர் படு கொலை : காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !*

பத்திரிக்கை செய்தி 16-05-2020 

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  .*

திருச்சியில் தாரா நல்லூர் நகரை சேர்ந்த மணிகன்டன் காவலர் பார்வை என்கிற வார பத்திரிக்கையில் நிருபராக பணியாற்றி வந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. என்பது குறிப்பிடதக்கது.

மேலும் அதே பகுதியில் இயங்கி வரும் சேவியர் ரைஸ்மிலில் ரேசன் அரிசியை கடத்தி வருவதாக தகவலின் அடிப்படையில்  ரைஸ்மில்லில் பணியாற்றிவர்களிடம்  செய்தியாளர் மணிகன்டன் விசாரித்து வந்துள்ள நிலையில் இன்று மாலை தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த மணிகன்டனை வெட்டி படு கொலை செய்த ஜான் கிரிஸ்டோபர் ,அஜீத், ஆகிய இருவரையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது .

மணிகன்டன் படு கொலையின் உண்மை காரணத்தை கண்டறிய காவல் துறை திவிர விசாரணையை மேற் கொள்ள வேண்டும் மெனவும் படு கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க பட வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்  .

இந்த கொரோனா நாளிலும் தனது உயிரை பணிய வைத்து செய்திகளை சேகரிப்பதற்கு இரவும் பகலும் பாராமல் கடினமாக உழைத்து வரும் செய்தியாளர்கள் மீது இது போன்ற சம்பவங்கள் நடை பெறுவது மிகுந்த வேதனை அளிக்கிறது . மேலும்  செய்தியாளர்கள் மீது காட்டு மிராண்டிதனமாக  தாக்குதல், படு கொலைகள் செய்வோர்களை இரும்பு கரம் கொண்டு தமிழக அரசு அடக்க வேண்டும் .

தமிழகத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் படுகொலைகள் போன்ற சம்பங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளது . இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு சிறப்பு கவணம் செலுத்தி தகுந்த நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . 

எனவே  : உயிரிழந்துள்ள செய்தியாளர் மணிகன்டன் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம்  இழப்பிடு வழங்க வேண்டும் எனவும் செய்தியாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக