செவ்வாய், 5 மே, 2020

டாஸ்மார்க் கடை திறக்க வேண்டாம்.ஊரடங்கு காலம் முடியும் வரை ஒத்திவைக்கவேண்டும் தமிழ்நாடு. வணிகர்கள் சங்கங்கள் பேரவை அவசர கோரிக்கை !!!

.
                                                     05.05.2020

அனுப்புனர்
தெர்மல்.சொ.ராஜா
மாநில அமைப்பாளர் (இ)
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை*

பெறுநர் 
*உயர்திரு மாவட்ட ஆட்சியர்  அவர்கள்* 
தூத்துக்குடி மாவட்டம்  ,
கோரம்பள்ளம்,
தூத்துக்குடி.

ஐயா,

பொருள் :  *தூத்துக்குடி நகரில் உள்ள அனைத்து கடைகளையும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாது திறந்து வணிகம் செய்யும் நாள் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது  என்ற கோரிக்கையை வலியுறுத்துவது சம்பந்தமாக*  

வணக்கம்.    
தற்போது நிலவிவரும் கொரானா வைரஸ்  அச்சுறுத்தலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதலமைச்சர் அவர்கள்      *விலகி இரு !* 
         *விழித்து இரு !!*
                    *வீட்டில் இரு !!!* என்ற அறிவிப்பினை ஏற்று தூத்துக்குடி  உள்ள வியாபாரிகள்  அனைவரும் கடைபிடித்து வருவதும் அதனால்  அவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாலும் அரசு எடுக்கும் அனைத்து  நடவடிக்கைகளையும் வணிகர்களாகிய நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளோம் என்பதையும்  தாங்கள் அறிவீர்கள். 
தற்போது  தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை வருகின்ற 7ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்ற செய்தி பொது மக்களிடையே பெரும்  அச்சத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா வைரஸ் கட்டுக்குள் இருப்பினும் தாங்கள் அனைத்து கடைகளையும் மே 17 வரை திறக்க அனுமதிக்கவில்லை. திறக்கும் கடைகள் சுழற்சி முறையில் மட்டுமே திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இவ்வாறு இருக்க தாங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில்உள்ள அனைத்து கடைகளையும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாது திறந்து வணிகம் செய்ய அனுமதிக்கும்  நாள் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது என்று  கேட்டுக் கொள்கிறோம். 
மேலும், டாஸ்மார்க் மதுக்கடைகளை ஊரடங்கு அமுலில் இருக்கும் போதே திறப்பது சமூகப்பார்வையிலும் முறையாக இருக்காது. மது அருந்திவிட்டு வீட்டில் தன் மனைவி மக்களை துன்புறுத்தும் நிலை இன்னும் அதிகரிக்கும். பொது வெளியிலும் குடித்து விட்டு போதையில் தன் இயல்பு இழக்கும் மனிதன் *"சமூக விலகல்" என்ற கருத்தியலைக் கடைபிடிக்கும் பண்பு குறையும். சண்டை சச்சரவுகளில் ஈடுபடும் சூழலும்  உருவாகும். இவற்றையெல்லாம்  கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
தங்கள் உண்மையுள்ள,
*தெர்மல்.சொ.ராஜா*
மாநில அமைப்பாளர் (இ)
*தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக