ஞாயிறு, 24 மே, 2020

வேலூரில் ஆட்டம் போட்ட போலி க்ரைம் போலீஸ் கைது

வேலூரில் ஆட்டம்  போட்ட  போலிக்ரைம் போலீஸ்  என்றும் நிருபர் என்றும் ஆட்டம் போட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இதுபற்றி விவரமாவது:-

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த பூண்டியை சேர்ந்த பூண்டி ஜெகன் (24) இவன் போலீயாக நிருபர், வக்கீல் என்று பல வகைகளில் ஆள்மாறட்டம் செய்து பலரை ஏமாற்றி பணம் பறித்து உள்ளார்.

இந்நிலை வேலூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த போது சந்தேகத்தின் பேரில் வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரித்த போது க்ரைம் பிராஞ்ச் போலீஸ் அதிகாரி என்ற போலீயான அடையாள அட்டையை வைத்திருந்தது தெரிய வந்தது. எங்கெங்கு மோசடியில் ஈடுபட்டு உள்ளார் என்பதை போலீசார் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.

News by
கே.எம் வாரியார்
  வேலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக