இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது..... தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம், 2008ல், கலை பண்பாட்டு துறையால் உருவாக்கப்பட்டது
இதில், 33 ஆயிரத்து, 575 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு, அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் வழங்கப்படும், நலத் திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில், 2019 செப்., 17ல் அரசாணை வெளியிடப்பட்டது.
நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள, 33 ஆயிரம் பேருக்கு மட்டுமே, கொரோனா நிவாரண நிதியான, 1,000 ரூபாய்,2 முறை வழங்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் கலைத்தொழில் இழந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆறு மாத காலம்தான் நாட்டுப்புற கலைஞர்க்கு நிகழ்வுகள் கிடைக்கும், இந்த காலம் முடிவடைந்தால் அடுத்த ஆண்டு தான் கலை நிகழ்வுகள் கிடைக்கும் அது வரை அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி வறுமையிலேயே மாய்ந்து விடுவார்கள்.
ஆகவே அதற்கு நிவாரணமாக பிரதி மாதம் 10000 ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கவேண்டும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் வழங்கப்படும் கலைஞர்களுக்கான அரசு அடையாள அட்டை மற்றும் நலவாரியத்தில் உறுப்பினர் இல்லாத கலைஞர்களுக்கும் மற்ற நலவாரியங்களுக்கு வழங்கும் நிவாரண தொகை மற்றும் இலவச அரிசி பருப்பு எண்ணெய் போன்றவற்றை வழங்கவேண்டும்.
திருவிழா காலம் முடிந்து விடுவதால் கலைஞர்களின் கலைநிகழ்வுகள் நடத்த கொரானா காலம் முடிந்ததும் கலைஞர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்த அரசாங்கம் வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
கும்மியாட்டம்
கோலாட்டம்
பொய்க்கால் குதிரையாட்டம்
சேவையாட்டம்
கழியல் ஆட்டம்
வேதாள ஆட்டம்
பகல் வேஷம்
வர்ணக் கோடாங்கி
பூத ஆட்டம்
கணியான் ஆட்டம்
கூத்து
கழைக் கூத்து
தோற்பாவைக் கூத்து
காவடியாட்டம்
மயிலாட்டம்
ஒயிலாட்டம்
பின்னல் கோலாட்டம்
தேவராட்டம்
சக்கையாட்டம்
சிம்ம ஆட்டம்
பொடிக்கழி ஆட்டம்
கரடி ஆட்டம்
புலி ஆட்டம்
பேய் ஆட்டம்
வில்லுப் பாட்டு
தெருக்கூத்து
பாவைக் கூத்து,
சிலம்பாட்டம்,
கரக ஆட்டம்,தப்பாட்டம்,நையாண்டி மேளக்கலைஞர்கள்,உறுமி மேளம் போன்ற கலைஞர்கள் வாழ்வாதரம் இழந்து தவித்து வருகின்றனர். அனைவருக்கும் உரிய நிவாரணங்கள் முறையாக வழங்கிட வேண்டும்,
அதற்காக பண்பாட்டு தலைவர் என்ற முறையில் -திருநெல்வேலி கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் சுந்தர் போனை எடுப்பதே இல்லை கலைஞர்கள் பிரச்சினையை கூற முயற்சித்தோம் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் விரைவில் தூத்துக்குடியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்என்றும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக