உலகத்தையே தற்போது அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிக சிறப்பாக எடுத்து வருகின்ற மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு.எடப்பாடி பழனிசாமி ஐயா அவர்களின தலைமையிலான தமிழக அரசு மிகவும் சிறப்பாக அனைத்துவித நடவடிக்கைகளும் சிறப்பாக எடுத்து வருகிறது.
ஆனால் தற்போது முன்பு இருந்த நிலையை விட காட்டுத்தீயை போல் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்ற இந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகளை அரசு அறிவித்து நடைமுறையில் இருப்பதால் மக்கள் முககவசம் அணியாமலும் , சமூக இடைவெளியினை கடைபிடிக்காமலும் , அங்கங்கே கூட்டமாகவும் சென்று வருகின்றனர்.
இதனால் கொரோனா தொற்று மிக அதிகாமான அளவில் விரைவில் பரவி அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட அதிகமான வாய்ப்பு உள்ளதால் கடைகளுக்கு கடுமையான கட்டுபாடுகளை விதித்து திறந்திருக்கும் நேரத்தை குறைத்திடவும் , அரசின் உத்தரவுகளை மீறுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திடவும் , வெளிமாநிலங்களில் இருந்து வேறு வேறு பாதைகளில் அரசின் தடையினை மீறி பலர் வாகனங்களில் வருபவர்களால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவுவதால் மாநில மற்றும் அனைத்து மாவட்ட எல்லைகளையும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மருத்துவக் குழுக்களுடன் உடனே ஏற்படுத்திட வேண்டுமெனவும் , அரசின் அனைத்துத்துறை அலுவலங்களிலும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் முககவசம் அணியவும் மற்றும் சமூக இடைவெளியினை கட்டாயம் கடைப்பிடிக்க கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமெனவும் தமிழக அரசை பொதுமக்களின் நலன் கருதி வணங்கி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்து இருந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக