செவ்வாய், 19 மே, 2020

தமிழ் பண்பாட்டு மேம்பாட்டு மையம் முயற்சியில்,ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நாட்டுபுற கிராமிய இசை கலைஞர்களுக்கு தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி.கலைகதிரவன் நிவாரண உதவி வழங்கல்!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ் பண்பாட்டு மேம்பாட்டு மையம் முயற்சியில்,ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நாட்டுபுற கிராமிய இசை கலைஞர்களுக்கு தூத்துக்குடி  ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

கோவில் கொடை விழா, திருமண விழா, பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிக்கு சென்று வருபவர்கள் தான் நாட்டுபுற இசைக்கலைஞர்கள்.
தை மாதம் முதல் ஆடி மாதம் வரையிலான திருவிழாக் காலம். அந்த காலத்தில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தான் ஆண்டு முழுவதும் வாழ்க்கையை நடத்துவார்கள்.

கொரோனா ஊரடங்கால் கோயில் திருவிழாக்கள் அனைத்தும்
ரத்தாகி விட்டன.

இதனால் நாட்டுப்புற  இசைக்கலைஞர்கள் வருமானமின்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நாட்டுபுற இசைக்கலைஞர்களின் ஊரடங்கு கால வாழ்வாதார  நிலையை கருத்தில் கொண்டு,தமிழ் பண்பாட்டு மேம்பாட்டு மையத்தின் தலைவர் ஜெகஜீவனின் சீரிய  முயற்ச்சியால்,தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான், திம்மராஜபுரம், காலாங்கரை ஆகிய பகுதிகளைச்  சேர்ந்த 70 நாட்டு இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு திம்மராஜ புரத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அரிசி, பருப்பு, காய்கறி,மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 70 நாட்டுபுற கிராமிய இசை கலைஞர்களுக்கு தூத்துக்குடி  ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன் நிவாரண உதவி வழங்கினார்.தட்டாப்பாறை காவல் உதவி ஆய்வாளர் மகாராஜன் முன்னிலை வகித்தார்.
இதற்கான செலவுகளையும் காவல்துறையே செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் , திம்மராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் சித்திரை செல்வன், திம்மராஜபுரம் 48 இசைக்கலைஞர்கள் , மணி பேன்ட் வாத்திய உரிமையாளர் மணி, வழக்கறிஞர் மணி,எப்போதும் வென்றான் செந்தில்வேல் நையாண்டி மேளம் குழுவினர், சிலம்பு செல்வம்,காலங்கரை மேகலிங்கம் கிராமிய ஆட்டக்காரர்கள் ,மாரி தப்பு குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக