திங்கள், 18 மே, 2020

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி, காயல்பட்டினம் அம்மா உணவகங்களில் வரும் மே 31 வரை இலவச உணவு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ உணவிற்கான செலவினத் தொகையை செலுத்தினார். 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஊரடங்கு சில நிபந்தனை தளர்வுகளோடு அமலில் உள்ளது. இந்நிலையில் ஏழை, எளிய பொதுமக்கள், சாலையோர ஆதரவற்றோர், உணவு தேவைப்படுவோர் அம்மா உணவகங்களை பயன்படுத்தி பசியாற்றிக்கொள்ளலாம், மூன்று வேளையும் அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்க அதற்கான  செலவுத் தொகையை அதிமுக ஏற்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார். 

அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் செயல்படும் 11 அம்மா உணவகங்களில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ சொந்த செலவில் கடந்த 25 நாட்களாக அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக  பொதுமக்களுக்கு இட்லி, பொங்கல், கலவை சாதம், உப்மா, முட்டை போன்ற உணவு வகைகள் விநியோகிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு நீட்டிப்பால் தொடர்ந்து 3 வது கட்டமாக மே 18 முதல் மே 31ம் தேதி வரை மேலும் 14 நாட்களுக்கு அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகத்திடம் அதற்கான செலவினத் தொகை செலுத்தப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. 

ஆகவே பொதுமக்கள் வரும் மே 31 ம் தேதி வரை அம்மா உணவகங்களில் கட்டணமின்றி இலவசமாக உணவு வகைகளை பெற்றுக்கொள்ளலாம் அதற்கான கட்டணத்தை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ செலுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக