திங்கள், 18 மே, 2020

தூத்துக்குடி மாநகராட்சி அம்மா உணவகங்களில் 8 லட்சம் பேர்கள் இலவசம் உணவு பெற்றதாக தகவல்!! மே 18 முதல் ஊரடங்கு காலம் முடியும் வரை அம்மா உணவகங் களில். பொதுமக்களுககு இலவச உணவு நீட்டிப்பு!!!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ  அவரது சொந்த.செலவில்
தூத்துக்குடி மாநகராட்சி அம்மா உணவகங்களில் கடந்த ஏப்ரல் 23 தேதியில் இருந்து மே-17 .தேதி வரை 25 நாட்களில் 8 லட்சம் மக்கள் இலவச உணவருந்தி பயன் பெற்று 
உள்ளா ர்கள்

மேலும் மே 18 தேதியிலிருந்து ஊரடங்கு காலம். முடியும்வரை தூத்துக்குடி மாநகராட்சி அம்மா உணவகங்களில் முன்று வேளையும் பொதுமக்களுக்கு இலவச. உணவு. வழங்க நீட்டிப்பு செய்து தொடரும் என தெற்கு மாவட்ட அதிமுக தரப்பில் எஸ்.பி சண்முகநாதன் எம்எல் ஏ. வழங்கவதாக தகவல் தெரிவி க்கிறார்கள் 

 இதன் பொருட்டு பயன்பெறும் ஏழை எளிய மக்கள்.தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ.வுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
         தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி. துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் அம்மா உணவகங்களில் கொரோனா ஊரடங்கு சட்டத்தால் வாழ்வாதாரம் இழந்த ஏழை மக்களுக்கு உணவு வழங்க கழக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டனர்.
       அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி, மற்றும் காயல்பட்டணம் நகராட்சி அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான நிதியை மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ.வழங்கினார்.
     
   
         தூத்துக்குடி மாநகராட்சி அம்மா உணவகங்களில் காலை இட்லி, மதியம் சாம்பார், தயிர், முட்டை இரவு கிச்சடி ,வெண் பொங்கல் ஏழை மக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
        தற்போது தூத்துக்குடியில் உள்ள அம்மா உணவகங்களில் ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக