புதன், 22 ஏப்ரல், 2020

23-04-2020 அன்று முதல்...தூத்துக்குடி- காயல்பட்டினம் அம்மா உணவகங்களில் மூன்று வேளை இலவச சாப்பாடு!!! தூத்துக்குடி மாநகராடசிக்கு தெற்கு மாவட்ட அதிமுகவினர் நிதியுதவி!!!

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. 
 இந்நிலையில் அதிமுக சார்பில் அம்மா உணவகங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கிட அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அதற்கான செலவை அ.இ.அதிமுக ஏற்பதாக தெரிவித்துள்ளனர். 

இன்று(22.04.2020) தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில்  தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இயங்கும் அம்மா உணவகங்களில் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் நாளை (23.04.2020) முதல் ஊரடங்கு காலம் அமலில் உள்ள (03.05.2020)வரை மூன்று வேளையும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவளிக்க ஏற்பாடு செய்யும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு. வீ.ப. ஜெயசீலன் ஐஏஎஸ் அவர்களிடம் அதற்கான அனுமதி கோரும் கடிதத்தை வழங்கியும், 11 நாட்களுக்கான கட்டண தொகையில் முன்வைப்பு தொகையாக ரூபாய் 2 லட்சமும்  தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர், மாவட்ட செயலாளரின் நேர்முக உதவியாளர் சாம்ராஜ் ஆகியோர் வழங்கினர்.
அப்போது சகாயராஜா, பாக்கியராஜ், லட்சுமணன், பில்லா விக்னேஷ், வக்கீல் சரவண பெருமாள் உள்ளிட்டோர் இருந்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சியை போன்று காயல்பட்டிணம் நகராட்சியில் செயல்படும் அம்மா உணவகத்தின் மூலம்  மூன்று வேளையும் உணவு வழங்க ஆகும் செலவினை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்
எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ சார்பில் வழங்கப்பட்டது.

thoothukudileaks
Date 2020 ஏப்ரல் 22
 time 7.25 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக