செவ்வாய், 21 ஏப்ரல், 2020

பசி பட்டினியோடு பரிதவிக்கும் தெரு நாய்களுக்கும் தூத்துக்குடி மாநகராட்சி உணவு வழங்க ஏற்பாடு!!!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சமுக விலகல் ஊரடங்கு உத்தரவினால்....
பெரும்பாலான உணவகங்கள் முடப்பட்டு இருக்கிறது. இவ் உணவகங்களில் விதியோரங்களில் மிச்சப்பட்டு வீசப்படும் உணவுகள் தெருநாய்கள் தின்று பசியாற்றி வந்தனர் .
.. இச் சூழலில்  இம்மாதிரி உணவு கூட இன்றி.பசி பட்டினியாக தெருவில் சுற்றி திரியும்  தெரு நாய்கள் பரிவித்தது. ரொம்ப பாவமாக கண்கூடாக பார்க்க நேரிட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி  இதற்காக மெனக்கெட்டு வீதிகளில சுற்றி திரியும் தெருநாய் களுக்கும்
மூன்று வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கிறார்கள்.
     
கொரானா பரவல் கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு 144 தடை உத்திரவு அமுல்படுத்தியது.
        இதனால் தூத்துக்குடி மாநகராட்சி. பகுதிகளில் சுற்றி திரியும் மன நோயாளி ,வீடுன்றிய வாழும் ஏழைகள் முதியோர்கள் உனவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.
     
    தெருவில்சுற்றி   திரிபவர்களுக்கு உணவு வழங்க தன்னார்வ அமைப்புகள் சிலர் முன் வந்து சில நாட்கள் மட்டுமே உதவி செய்கின்றனர்.
       வயதானவர்களுக்கு சில தூத்துக்குடி மாநகராட்சி அம்மா உணவகத்தில் மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது.
         இவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்க தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் அறிவுரை படி உதவி ஆணையர் சந்திரமோகன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் கொண்ட குழுவினர் வயதான, வேலைக்கு செல்ல முடியாதவர்கள் இடம் தேடி அவர்களுக்கு காலை, மதியம், இரவு மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது.
       
         இதைப்போல சில தெருக்களில் உணவு கிடைக்காமல் பட்டினியுடன் நாய்கள்.சுற்றி திரிவது பரிதாபத்தை வரவைழைத்துள்ளது
      இதை கண்ட தூத்துக்குடி மாநகராட்சி தெரு நாய்களுக்கும் மூன்று வேளை உணவு சுற்றி திரியும் இடம் தேடி வழங்கி வருகிறது.
           தூத்துக்குடி மாநகராட்சி யின் இத்தகைய செயலை பிராணிகள் அமைப்பு, சமூக அமைப்புகள் பாராட்டி வருகிறார்கள்
News: 21-04-2020 time 2.00 pm
thoothukudileaks 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக