சனி, 7 செப்டம்பர், 2019

லயன்ஸ்‌ கிளப்‌ மற்றும்‌ வ.உ.சி பொறியில்‌ கல்லூரி இணைந்து நடத்திய மெகா இரத்த தான முகாம்!!! தூத்துக்குடி SP. அருண் பால கேn பாலன் துவக்கி வைத்தார்!!!

தூத்துக்குடி நூற்றாண்டு லயன்ஸ்‌ கிளப்‌ மற்றும்‌ வ.உ.சி
பொறியில்‌ கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய மெகா இரத்த தான
முகாம் நடைெபெற்றது .


இந்த ரத்ததான முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு. அருண்‌
பாலகோபாலன்‌, இ.கா.ப அவர்கள்‌ தலைமை விருந்தினராக கலந்து -
கொண்டு சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்‌.

இன்று (07.09.2019) காலை தூத்துக்குடி நூற்றாண்டு லயன்ஸ்‌ கிளப்‌
மற்றும்‌ வ.உ.சி. பொறியியல்‌ கல்லூரி ஆகியவை இணைந்து வ.உ.சி பொறியியில்‌
கல்லூரி வளாகத்தில்‌ மெகா இரத்த தான முகாம்‌ நடைபெற்றது. இந்த இரத்த
தான முகாமில்‌ 103 மாணவ, மாணவிகள்‌ இரத்த தானம்‌ செய்ய முன்‌
வந்துள்ளனர்‌. ்‌

இந்த முகாமில்‌ தூத்துக்குடி மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.
அருண்‌ பாலகோபாலன்‌, இ.கா.ப அவர்கள்‌ தலைமை விருந்தினராக கலந்து
கொண்டு இரத்த தானம்‌ செய்வதன்‌ முக்கியத்துவத்தையும்‌, இரத்த தானம்‌
கொடுக்க வந்தவர்களை பாராட்டியும்‌, இதேபோன்று இளைஞர்கள்‌ மற்றும்‌ பொது
மக்களும்‌ இரத்த தானம்‌ வழங்க ஆர்வமுடன்‌ முன்‌ வரவேண்டும்‌ என்று
எடுத்துரைத்து, பின்‌ இரத்த தானம்‌ செய்வதை துவக்கி வைத்தார்‌.

இந்த இரத்த தான முகாமை தூத்துக்குடி பியர்ல்‌ ஜீபிலி கவர்னர்‌ திரு.
முருகன்‌ துவக்கி வைத்தும்‌, லயன்ஸ்‌ கிளப்‌ தலைவர்‌ லயன்‌ திரு. ராஜ்‌ என்பவர்‌
வரவேற்புரையாற்றியும்‌, வ.உ.சி பொறியியல்‌ கல்லூரி முதல்வர்‌ முனைவர்‌
செண்பக விநாயகமூர்த்தி, உதவிப்‌ பேராசிரியர்‌ முனைவர்‌ திருமதி. மதுமதி,
மருத்துவர்‌ திருமதி. சாந்தி. லயன்‌ கிளப்பைச்‌ சேர்ந்த லயன்‌ திரு. ராம்ஸ்‌
அன்பரசன்‌, திரு. சுப்பையா, திரு. ஹாஜா முஹை தீன்‌, திரு. சுடலைமணி,
கதிரேச பாண்டியன்‌, திரு. முருக இசக்கி, பொறியியில்‌ கல்லூரி மாணவ,
மாணவிகள்‌, தென்பாகம்‌ காவல்‌ ஆய்வாளர்‌ திரு. ஜீன்‌ குமார்‌,
 தனிப்பிரிவு உதவி
ஆய்வாளர்‌ திரு. பேச்சிமுத்து மற்றும்‌ காவல்துறையினர்‌ கலந்து கொண்டனர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக