சனி, 7 செப்டம்பர், 2019

நேரில் சென்று இ ஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஊக்கமூட்டிய பிரதமர் மோடி !!!


இஸ்ரோவின் உழைப்பு வீண்போகாது

சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், இன்று அதிகாலை, 2:15 மணி அளவில், தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து, 'சிக்னல்' துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர், சிவன் அறிவித்தார்.

சிக்னல் துண்டிக்கப்பட்டது
சந்திராயன்-2 திட்டம் நிறைவேற பாடுபட்ட இஸ்ரோவிற்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். உங்களின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு இந்தியனுக்கு உத்வேகம் அளித்துள்ளது. உழைப்பு என்றுமே வீண் போகாது.

நமது வெற்றி பயணத்தில் சில தடைகள் இருந்திருக்கலாம்  ; அந்த தடைகள் நிரந்தமானதாக நமக்கு இருக்காது*

நம்முடைய உத்வேகத்தை அது குறைக்காது*

* பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஊக்கமூட்டி னார்
ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையுடன் பணியாற்றினீர்கள். கடைசி நிமிடத்தில் சிறிய சறுக்கல் ஏற்பட்டது அது தோல்வி அல்ல - பிரதமர் மோடி

இன்று
எங்கள் பிரதமரின் வார்த்தைகள் மிகவும் உறுதியும் ஊக்கமும் அளித்தன. நாம் வெற்றி பெறுவோம். தோல்வி மற்றும் வெற்றி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. எங்கள் விஞ்ஞானிகள் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. கடவுள் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்
தூத்துக்குடி லீகஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக