சிறுவியாபாரிகள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை 12ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
சிறிய வியாபாரிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வரும் 12ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
ஜிஎஸ்டி கணக்கின்படி ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய்க்கு கீழ் வர்த்தகம் செய்யும் சிறுவியாபாரிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மோடி தலைமையிலான அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்துள்ளது.
இதன்படி 60 வயதை அவர்கள் அடைந்ததும் மாதம் 3 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு ஓய்வூதியம் அளிக்கும். இத்திட்டத்தால் 3 கோடி பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்டோர் மாதம் தோறும் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பிரிமீயம் செலுத்தி இத்திட்டத்தில் இணையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நாக்பூரில் இன்று இத்திட்டத்தை மோடி தொடங்கி வைப்பதாக இருந்த நிலையில் பலத்த மழை காரணமாக பிரதமரின் நாக்பூர் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாக்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆயினும் திட்டமிட்டபடி பிரதமர் மோடி இன்று பல்வேறு நலத்திட்டங்களுக்காக அவுரங்காபாத் செல்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக