வெள்ளி, 6 செப்டம்பர், 2019

மிரட்டல்‌..கொலை முயற்சி தூத்துக்குடியில் இருவர் கைது!!!

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் பகுதியில்....
தூத்துக்குடி பூபால்ராயர்புரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் பண்டாரம் மகன் செந்தில்வேல்முருகன்(41). இவர் கிருஷ்ணராஜபுரம் மெயின் ரோட்டில் டெய்லரிங் கடை நடத்தி வருகிறார்.

 தூத்துக்குடி, அலங்காரதட்டு பகுதியை சேர்ந்தவர் சலீம் மகன் சேக் நவாஸ்(31).இவர் செந்தில் வேல் முருகனின் டைலரிங் கடைக்கு வந்து பணம் கேட்டுள்ளார். இதற்கு செந்தில் வேல் முருகன் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் சேக் நவாஸ், செந்தில்வேல் முருகனிடம் தவறாக பேசி கத்திரிக்கோலால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.*

*இதுகுறித்து செந்தில் வேல் முருகன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் திருமதி. கோகிலா Cr. No. 359/19 U/s 294(b), 307, 506(ii) IPCன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.*

Next News

*தூத்துக்குடி மாவட்டம் :06.09.2019*

*தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம்*

* தூத்துக்குடி பாத்திமா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ரவி மகன் மரிய அந்தோணி பிரதீப்(30). இவர் கடந்த 01.09.2019 அன்று தனது நண்பரான நிக்கல்சன் என்பவருடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த தேவசகாயம் மகன் ஜெகதீஷ் குமார்(37) என்பவர் தவறாக பேசியுள்ளார்.*

* இதுகுறித்து மரிய அந்தோணி பிரதீப் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த முன்விரோதம் காரணமாக ஜெகதீஷ் குமார் 05.09.2019 அன்று மரிய அந்தோணி பிரதீப்பின் வீட்டிற்குத் சென்று தவறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.*

 இதுகுறித்து மரிய அந்தோணி பிரதீப் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராஜாமணி வழக்கு பதிவு செய்து ஜெகதீஷ் குமாரை கைது செய்தார்.*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக