ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

தூத்துக்குடி மருத்துவமனையில் கலெக்டர் தலைமையில்நேn யாளி நல சங்கம் கூ ட்டம் தூத்துக்குடி மதிமுக ேகோாரிக்கை !!!

  தூத்துக்குடி மருத்துவமனையில் கலெக்டர் தலைமையில்நேn யாளி நல சங்கம் கூ ட்டம் தூத்துக்குடி மதிமுக கோாரிக்கை !!! மனு தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவரிடம் அளித்தனர்

இதன் விவரமாவது
பெறுநர்

உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்
தூத்துக்குடி.

1. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி
மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர்
அவர்கள் தலைமையில் நடைபெறும் நோயாளிகள்
நலச் சங்க கூட்டம் உடனடியாக நடத்துவதற்குரிய
நடவடிக்கை எடுக்க வேண்டி.

பொருள்:

2. தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும்
நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.
சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்,
மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் போன்று நோயாளிகள்
நலச்சங்க கூட்டத்தையும் நடத்த வேண்டுமென
கேட்டுக்கொள்கிறேன்

அன்பார்ந்த ஐயா,

வணக்கம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தினசரி
மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைப்
பெறுவதற்கும், ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனையில்
தங்கியிருந்தும் சிகிச்சைகள் பெற்று வருகின்ற மிக முக்கியமான
மருத்துவமனையாக திகழ்ந்து வருகிறது.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறும்
நோயாளிகள் நலச் சங்க கூட்டம் கடந்த பல மாதங்களாக அரசு மருத்துவக்
கல்லூரி மருத்துவமனையில் நடைபெறவில்லை.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மருத்துவக் கல்லூரி
முதல்வர். மருத்துவ கண்காணிப்பாளர், மருத்துவமனை டாக்டர்கள் சமூக
ஆர்வலர்கள் நன்கொடையாளர்கள் நோயாளிகள் பொதுமக்கள் அகியோர்
கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறி நோயாளிகள் |கருத்துகளையும் கேட்டறிந்து விவாதித்து மேற்கொண்டு எவ்வாறு
செயல்படுத்தாலம் நோயாளிகளுக்கு எந்தவிதமான வசதிகள் செய்து
கொடுக்கலாம் என முடிவு செய்து நன்கொடையாளர்களிடம் இருந்து
எந்தவிதமான உதவிகள் பெற்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும்
நோயாளிகளுக்கு எப்படிப்பட்ட உதவிகள் செய்யலாம் என முடிவு செய்து
மருத்துவமனையில் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் அந்த கூட்டம் மிகச்
சிறப்பாக நடைபெறும் ஆனால் கடந்த பல மாதங்களாக அந்தக் கூட்டங்கள்
நடைபெறவில்லை, எனவே நோயாளிகளின் குறைகள் முழுமையாக
தீர்க்கப்படுவதற்கும். மருத்துவமனையின் வளர்ச்சிக:கும் உரிய முடிவுகள்
எடுக்கப்படவில்லை. இது நோயாளிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில்
மிகவும் மனவேதனையை உருவாக்கி உள்ளது. எனவே நோயாளிகள் நலச்
சங்க கூட்டத்தை வருகிற மாதத்தில் இருந்து நடத்துவதற்குரிய நடவடிக்கை
எடுத்து உதவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.'

பொது மக்களின் சுகாதாரம் மிக முக்கிய பிரச்சனையாகும். பிறக்க
இருக்கின்ற சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிர் வாழக் கூடிய
மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனையில் அரசு நிர்வாகமும்.
மாவட்ட நிர்வாகமும் மெத்தனப் போக்கை கடைபிடிக்காமல் மிகவும்
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது மிக மிக அவசியம்.

எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நோயாளிகள்
நலச்சங்க கூட்டத்தினை உடனடியாக நடத்தி நோயாளிகள் பொதுமக்களின்
அச்சத்தினை போக்கி பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் போர்க்கால
நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

நாள்: 09.09 2019
இடம்: தூத்துக்குடி

இப்படிக்கு
தங்கள் அன்புள்ள

(ஆர்.எஸ்.ரமேஸ்)
மாவட்ட ெசெயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக