அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் வழியாகச் செல்ல திட்டமிடப்பட்டுள்ள எரிவாயு குழாயை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி குலையன்கரிசல் கிராமத்தைச் சார்ந்த இர.தினகர் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் வசித்து வருகிறார். முதலமைச்சர் கலிஃபோர்னியா மாநிலம் வருவதையொட்டி, அவரை நேரில் சந்தித்து மனு .
அமெரிக்கா-வில்
தமிழக முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ள மனுவில் ..
குலையன்கரிசலுக்கு வடக்கே பொட்டைக்குளம் – கோரம்பள்ளம் இடையே உள்ள தடுப்பணை கட்டப்பட்டுள்ள உப்பாறு ஓடையின் கரையோரத்தில் எரிவாய் குழாய்க்கு மாற்றுப் பாதை உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இர.தினகர், இது குறித்து முதலமைச்சரின் தனிச் செயலாளரிடம் விரிவாகவும் விவரித்துள்ளார்.
250 ஆண்டுகளாக முன்னோர்கள் பாடுபட்டு உவர் நிலத்தை விளை நிலமாக மாற்றியதை எடுத்துக்கூறிய இர.தினகர் 8 அடி ஆழத்திற்கு மண்ணைத் தோண்டுவதால், மீண்டும் உவர் நிலமாகி விடும் அபாயம் பற்றியும் எடுத்துரைத்துள்ளார். தற்போது திட்டமிடப்பட்டுள்ள பாதையையும், மாற்றுப் பாதையும் வரைபடத்தின் மூலமாகவும் முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.
குலையன்கரிசல் விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக, அமெரிக்காவில் முதலமைச்சரிடம் மனு வழங்கியுள்ள விவரம் அறிந்த இளைஞர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.
கம்யூட்டர் துறையில் பணியாற்றி வருபவர் குலையன்கரிசல் இர.தினகர்,

![]() |
| இர. தினகர் |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக