ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

தூத்துக்குடி புளியம்பட்டி யில் கணவனை கல்லால் தாக்கி கிணற்றில் தள்ளிய இளம் மனைவி கைது!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி காவல் நிலையம் பகுதியில்

கலியாவூர், காலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் திருமணி மகன் பாஸ்கரன்(33). இவருக்கும் சிங்கத்தாகுறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த மஞ்சு (21)  என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.*

இந்நிலையில் கடந்த வாரம் சிங்கத்தாகுறிச்சியில் கோவில் திருவிழாவுக்கு  பாஸ்கரன் தனது மனைவியான மஞ்சுவை அழைத்து வந்துள்ளார்.*

 இந்நிலையில்  மஞ்சுவுக்கு கருச்சிதைவு  ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பாஸ்கரன் மற்றும் மஞ்சு ஆகியோருக்கும் 06.08.2019 அன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது*

இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு பாஸ்கரனை தவறாக பேசி கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் பாஸ்கரன் தவறி கிணற்றுக்குள் விழுந்து உள்ளார்.*

 இதுகுறித்து பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் புளியம்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. செல்வன்  வழக்கு பதிவு செய்து மஞ்சுவை கைது செய்தார்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக