செவ்வாய், 3 செப்டம்பர், 2019

தூத்துக்குடி திமுக பிரமுகர் கருணாகரன் கெn லை வழக்கில் இருவர் ைகைது!!


தூத்துக்குடி, புதுக்கோட்டை, குலையன்கரிசல் கருணாகரன் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட இருவரை தண்டனைக் கைதியாக வைக்க தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு. சிம்ரன் ஜித் சிங் கலோன், இ.ஆ.ப. அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட குலையன்கரிசல் கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்த பூலோகப்பாண்டியன் மகன் இளையராஜா(28/19) நடுத்தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் ரமேஷ்(26/19) ஆகிய இருவரையும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் முறையே 18.03.2019 மற்றும் 01.07.2019 ஆகிய இரு நாட்களில் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப் பிரிவு 107ன் படி உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் சார் ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினர்.*

அதனைத் தொடர்ந்து சார் ஆட்சியர் நீதிமன்றத்தில் இருவரிடமும் பொது அமைதியை காப்பதற்கு பிணைத் தொகை ரூபாய் 5000/- நிர்ணயம் செய்து 18.03.2019 மற்றும் 01.07.2019 நாட்களில் பொது அமைதிக்iகு பங்கம் விளைவிக்கும் வகையிலும், தொடர் குத்து செயலில் ஈடுபட மாட்டேன் என்றும் இருவரிடமும் பிணை பத்திரம் எழுதி பெறப்பட்டது.

மேற்படி பிணையப்பத்திரம் பெறப்பட்ட 6 மாத காலத்திற்குள் 22.07.2019ம் தேதி 17.30 மணிக்கு இருவரும் வன்முறையில் ஈடுபட்டு புதுக்கோட்டை கருணாகரன் கொலைக் குற்றம் புரிந்துள்ளனர்.*

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன் அவர்களின் மேற்பார்வையில், புதுக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. திருமலை அவர்கள் இளையராஜா மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது குற்ற விசாரணை நடைமுறை சட்டப்பிரிவு படி நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி சார் ஆட்சியர் அவர்களிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.*

அதனடிப்படையில் மேற்படி இளையராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110ன் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டு நடைமுறையில் இருக்கும் தருவாயில் மீளவும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு பொது மக்களின் உயிருக்கும்/ உடமைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் உள்ளதாலும், பொதுமக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டியும், எதிர்காலத்தில் இது போன்று விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு நல்ல நோக்கத்துடன் மேற்கொண்டு சட்டத்திற்குப் புறம்பாக பொது அமைதிக்கு எவ்வித பங்கம் நேரக்கூடாது என்பதால், கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக வைக்கப்பட்டுள்ள இளையராஜாவை தற்போதைய அசாதாரண சூழ்நிலை கருத்தில் கொண்டு குத்து சாரணை முறைச்சட்டம் 122 (1)(b)ன் படி 17.09.2019 வரையும் ரமேஷை 31.12.2019 அல்லது  சட்டப்படி உயர் நீதிமன்ற ஆணைப்படி விடுவிக்கப்படும் வரை சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டு சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.*

எனவே இளையராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தற்போது தூத்துக்குடி மாவட்ட சிறைச்சாலை, பேரூரணி சிறைச்சாலையில் விசாரணை கைதியாக வைக்கப்பட்டுள்ளவர்களை தண்டனை கைதியாக வைக்க தூத்துக்குடி சார் திரு. சிம்ரன் சஜித் சிங் கலோன் இ.ஆ.ப. அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Next News

*தூத்துக்குடி மாவட்டம் :03.09.2019

*தூத்துக்குடியில் ஹெல்மெட் அணியாமலும், குடிபோதையிலும் மற்றும் லைசென்ஸ் இல்லாமலும் இருசக்கர வாகனம் ஓட்டியவருக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ரூபாய் 16,000/- அபராதம் விதித்தது.*

*கடந்த 01.09.2019 அன்று மாலை 16.40 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி சந்திப்பில் காவல்துறை போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தூத்துக்குடி, அந்தோணியார்புரம், கால்டுவெல் காலனி 3வது தெருவைச் சேர்ந்த சண்முகநாதன்(29) என்பவர் தனது ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிளில்(TN 69 AP 8896) லைசென்ஸ் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல் குடிபோதையில் ஓட்டி வந்தார்.*

*இது சம்பந்தமாக போக்குவரத்து உதவி ஆய்வாளர், அவர் மீது 185  MV Act, 3 r/w 181 MV Act, 129 r/w 177 M.V. Actன் படி வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் II அவர்கள் முன்னிலையில் ஆஜர் படுத்தினார்.*

*இதனை இன்று (03.09.2019) விசாரித்த நீதித்துறை நடுவர் அவர்கள் சண்முகநாதனுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கு ரூபாய் 10,000/- மும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூபாய் 5000/-மும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூபாய் 1000/-மும் ஆக மொத்தம் 16,000 அபராதம் விதித்தார். மேற்படி சண்முகநாதன் இந்த அபராத தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினார்.*
🇹 🇭 🇴 🇴 🇹 🇭 🇺 🇰 🇺 🇩 🇮 
🇱 🇪 🇦 🇰 🇸 
 🇩 🇦 🇹 🇪     4️⃣   🇸 🇪 🇵   
 2️⃣ 0️⃣ 1️⃣ 9️⃣ 
 🇹 🇮 🇲 🇪   8️⃣ ⚫ 3️⃣ 7️⃣ 🇦 🇲 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக