செவ்வாய், 3 செப்டம்பர், 2019

தூத்துக்குடி. ..மிரட்டல் புகார் 4பேர் கைது!!!!

தூத்துக்குடி. ..மதுபோதை மற்றும்  மிரட்டல் விட்டவர் 4 பேர் கைது!!



தூத்துக்குடி மட்டகடை பகுதியைச் சேர்ந்தவர் ஜூடி-42 (D/o குயின் வில்வராயன்). இவர் 02.09.2019 அன்று அதே பகுதியில் உள்ள பேட்ரிக் தேவாலயம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எம்பரர் தெருவைச் சேர்ந்த பெலன்ட்டின் பிரகாஷ்-49 ( S/o. கில்பர்ட்) என்பவர் மதுபோதையில் ஜூடியிடம் தவறாக பேசி தகராறு செய்து மிரட்டியுள்ளார

இதுகுறித்துஜூடி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம் Cr. No. 353/19 u/s 341, 294(b), 506(ii) IPCஇன் கீழ் வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்தார்.
Next

தூத்துக்குடி மாவட்டம் :03.09.2019
முத்தையாபுரம் காவல் நிலையம
 அத்திமரப்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் ரெங்கசாமி(39). இவர் 02.09.2019 அன்று அத்திமரப்பட்டி கோவில் திருவிழாவின்போது பட்டாசு விடும் பணியில் ஈடுபட்டிருந்தார்

அப்பொழுது அத்திமரப்பட்டி வேதக் கோயில் தெருவைச் சேர்ந்த காட்டுராஜா மகன்களான காமேஷ்(22), செல்வகுமார்(21) மற்றும் தூத்துக்குடி குமாரசாமி நகரைச் சேர்ந்த முத்துலிங்கம் மகன் பூவலிங்கம்(17) ஆகியோர் எங்கள் தெருவில் பட்டாசு வெடிக்குமாறு கூறியுள்ளனர்.

 இதற்கு ரெங்கசாமி,  பட்டாசு காலியாகிவிட்டது என கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் காமேஷ், செல்வகுமார் மற்றும் பூவலிங்கம் ஆகிய மூவரும் சேர்ந்து ரெங்கசாமியை கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ரெங்கசாமி அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல்நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் திரு. செல்வராஜ் Cr. No 287/19 U/s 294(b), 352, 506(ii) IPCன் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக