தூத்துக்குடியில் இரட்டை கெnனல 7 பேர் கெnண்ட கும்பல் வெறி செயல்!!
அப்பகுதி புகைப்படங்கள் News கடைசியில் காண்க!!
தூத்துக்குடி சிவந்தாகுளம் 2வது தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பூ மகன் முகேஷ் என்ற முருகேசன் (40). இவர் கப்பலில் மரைன் இஞ்சினியர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திரா குமாரி. இவர் டெல்லியில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. முருகேசன், கடந்த 2மாதங்களுக்கு முன்பு தான் கப்பலில் இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்துள்ளார். தற்போது தனது வீட்டின் அருகிலேயே புதிய வீடு கட்டி வருகிறார்.
இவரது நண்பர், தூத்துக்குடி பிரையண்ட் நகர் 13 வது தெருவைச் சேர்ந்த பிச்சைக்கனி மகன் விவேக் (42).இவர் தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இல்லை. இரண்டு பேரும் இன்று மதியம் 3மணியளவில் தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில், சிவந்தாகுளம் சந்திப்பில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த மணிகன்டன் என்பவர் வேகமாக சென்றதைப்பார்த்து முருகேசன், மெதுவாக செல் என்று சொன்னாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சமாதானம் பேசி மணிகன்டனை அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் ஆத்திரம் அடைந்த மணிகன்டன் தனது நண்பர்களிடம் விவரத்தை கூறி முருகேசனை கொலை செய்வதற்கு 3பைக்குகளில் 7பேர் வந்து சிவந்தாகுளம் சந்திப்பில் நின்றுகொண்டிருந்த முருகேச்னை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற விவேக்கையும் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினார்கள். இருவரும் உயிருக்கு பயந்து ஓட முற்பட்ட போது இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதில், சம்பவ இடத்திலேயே முருகேசன் உயிரிழந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விவேக்கை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.அருண் பாலகோபாலன், டவுன் டி.எஸ்.பி. பிரகாஷ் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும், இன்ஸ்பெக்டர்கள் ஜீன்குமார், ஜெயப்பிரகாஷ், தங்ககிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ஊர்க்காவலபெருமாள் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழ்க்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
Next ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக