ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக தூத்துக்குடியில் பரபரப்பு பேட்டி

ஸ்டெர்லைட் எதிர்ப்பு  மக்கள் இயக்கம் சார்பாக தூத்துக்குடியில் பரபரப்பு பேட்டி அளித்தார்கள்.

தூத்துக்குடி பிரஸ் கிளப் ல இன்று 15-09-2019 காலை நடைபெற்றது. அதில் கலந்த கொண்ட வர்கள்  செய்தி விவரமாவது:-

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் கடந்த 12.09.19 மற்றும் 13.09.19 ஆகிய இரு
தினங்களில் தேசிய மனித உரிமை ஆணையம் சார்பாக, மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொது
விசாரணை நடைபெற்றது. 


இந்த பொது விசாரணையில் பங்கேற்க, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள்
இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாத்திமா பாபுவும் அழைக்கப் பட்டிருந்தார்.
அவர்களுடன் இயக்கத்தைச் சார்ந்த பலரும் 13ஆம் தேதி நிகழ்வுகளில் கலந்து கொண்டோம்.

அதில் மே 22 , 2018 அன்று நடந்த துப்பாக்கி சூடு மற்றும் அதனை தொடர்ந்து இன்றுவரை
தொடரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீதான அடக்குமுறையும், மனித உரிமை மீறல்களையும்
எடுத்துரைத்தோம்.

முன்னதாக பேசிய HRDA (மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு) தேசிய செயலாளரும்
ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீதான மனித உரிமை மீறல் வழக்குகளை கண்காணித்து வரும் பிரபல
வழக்கறிஞருமான ஹென்றி டிபேன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் நீதியரசர்கள் குழுவிடம்
மே 22 கொடூர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு பிறகு ஜூன் மாதம் தேசிய மனித உரிமை ஆணையம்
தானே முன்வந்து ஒரு உண்மையறியும் குழுவை ஏற்படுத்தி விசாரணை நடத்தியதையும், அதன் பின்
பாதிக்கப் பட்டோருக்கு போதுமான இழப்பீடு வழங்கப் பட்டுவிட்ட தென்றும் ஊரில் சட்டம் ஒழுங்கு
கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றதென்றும் காரணம் கூறி வழக்கை முடிவுக்கு கொண்டு
வந்துவிட்டதையும் சுட்டிக் காட்டினார்.


கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு வழக்கை தானே
முன்வந்து நடத்தி விசாரணையும் மேற்கொண்டு அதன் பிறகு தன்னுடைய விசாரணை அறிக்கையை
வெளியிடாமல் மூடிவிட்டது. 

இது தொடர்பாக டிசம்பர் மாதத்தில் ஒன்றும் இந்த மாதம் ஒன்றுமாக
இரண்டு மறுவிசாரணை மறுபரிசீலனை மனுக்களை மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு
சார்பாக திரு. ஹென்றி டிபேன் அளித்திருப்பதையும் சுட்டிக் காட்டினார். இந்த மனு தற்பொழுது
நடத்தப் பட்ட முகாம் அமர்வில் எடுக்கப் பட்டது. NHRC யின்் தலைவர் நீதியரசர் H 2 Dattu
மறுபரிசீலனை மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

திரு ஹென்றி டிபேன் வலியுறுத்தியது போல தூத்துக்குடி படுகொலையினை விசாரித்த தேசிய மனித
உரிமை ஆணையம் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி தமிழக அரசிடம் மட்டும் பதிலுரை வாங்கிக்
கொண்டு அக்டோபர் மாதம் வழக்கினை மூடியது தூத்துக்குடி மக்களை பெரிதும் ஏமாற்றம் அடைய
செய்துள்ளது. 


இதுவரை தேசிய மனித உரிமை ஆணையத்தின் வரலாற்றில் இது போன்ற கொடுமை
நடத்ததில்லை என்றும் உடனடியாக மே 22 , 2018 படுகொலைத் தொடர்பான வழக்கினை
மறுவிசாரணை செய்ய வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது என்பதை ஸ்டெர்லைட்
எதிர்ப்பு மக்கள் இயக்கமும் முன்வைத்தது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்ற பெயரிலே இன்னும்
அடக்கு முறைகள் தொடர்கின்றன. அரசியல் சாசனத்தின் பிரிவு 19 இன்னும் கேள்விக் குறியாக்கப்
பட்டிருக்கின்றது என்பதும் வேதனையான உண்மையே!!!!

இவ்வாறு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கினைப்பாளர் போராசிரியை பாத்திமா பாபு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக