
ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக - சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் விதமாக நடக்கும் கருத்தரங்க கூட்டம் நடத்ததடைகோரி வக்கீல் அதிசய குமார் தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலேேகாபால் அவர்களிடம் பரபரப்பு புகார் மனு!!!.
அம்மனுவில் ெதெரிவித்து இருப்பதாவது
அனுப்புநர்
இ.அதிசய குமார்,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்,
தூத்துக்குடி.
பெறுநர்
உயர் திரு .மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள்,
தூத்துக்குடி.
அய்யா,
பொருள் :- மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை என்ற பெயரில் தமிழக அரசு தடை விதித்துள்ள ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக - சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் விதமாக நடக்கும் கருத்தரங்க கூட்டத்தை தடைசெய்யக் கோரி .
பார்வை :- ந.க.அ5/ 3349/13 நாள். 20.6.2013ல்
திருச்செந்தூர் RDO பிறப்பித்த உத்திரவு.
- - - - - -
இன்று (21-09-219) மாலை 2 மணியளவில் குரும்பூர் ஞானம் திருமண மண்டபத்தில் வைத்து நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கத்தை மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை என்ற பெயரில் அப்பகுதியைச் சார்ந்த ஜிந்தா என்பவர் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
மேற்படி ஜிந்தா என்பவர் பல அமைப்புகளுக்கு செயலாளராக உள்ளதாக சில மாதங்களாக அரசு தடை செய்துள்ள ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மனு அளிப்பதும், பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பதுமாக இருந்து கொண்டு பொது மக்கள் மத்தியில் சட்ட ஒழுங்கு பிரச்சனையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார்.
மேற்படி ஜிந்தா என்பவர் பல்வேறு பெயர்களில் அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, பொதுமக்கள் மத்தியில் சாதி மோதல்களை உருவாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் செல்படுவதாகவும், இவர் இந்த அமைப்பின் பொருப்புகளில் நீடிப்பது நிர்வாக நலனுக்கு உகந்ததல்ல என்று திருச்செந்தூர் RDO 20.6.2013ல் பார்வையில் கண்ட உத்திரவு பிறப்பித்துள்ளார்.
கோட்ட நிர்வாக நடுவர் 2013ம் ஆண்டு ஜிந்தாவிற்கு எதிராக உத்திரவு போட்ட பின்பும் மேற்படி நபர் தொடர்ச்சியாக சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் விதமாக செயல்பட்டு வருகின்றார். இவர் மீது குரும்பூர் காவல் நிலைய குற்ற எண்கள் 124 /19, 68/17, 67/17 மற்றும் பல குற்ற எண்களில் வழக்குகள் உள்ளது.
ஆகவே, உயர் திரு .மாவட்ட காவல் துறை கண்கணிப்பாளர் அவர்கள், மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை என்ற பெயரில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தை தடை செய்யும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள்உண்மையுள்ள,
இ.அதிசயகுமார் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்,தூத்துக்குடி
இவ்வாறு தெரிவித்துள்ளார.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக