திங்கள், 16 செப்டம்பர், 2019

தூத்துக்குடி கலெக்டரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை மனு!!!

தூத்துக்குடி மாவட்டம் இளவேளங்கால் மற்றும் கோடங்கால் கிராம் விவசாயிகளுக்கு
இழப்பீடு வழங்கக்கோரியும் ஓடை அமைத்து தரக்கோரி  தூத்துக்குடி கலெக்டரிடம் இன்று 16-09 - 2019 மனு அளித்தனர்
இது பற்றி விவரமாவது:-

     தூத்துக்குடியிலிருந்து மதுரை வரைக்கும் நடைபெறக்கூடிய ரயில் தண்டவாளம்
அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இப்பணிக்காக விவசாய நிலங்கள்
கையெகப்படுத்தப்பட்டுள்ளது. 

அந்த நிலத்திற்கான இழப்பீடு இளவேலங்கால் கிராம
விவசாயிகளுக்கும் கோடங்கால் விவசாயிகளுக்கும் இன்னும் வழங்கவில்லை. 

அந்த
விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் விவசாய நிலத்திற்கும் ரயில் தண்டவாளத்திற்கும் இடையே மழை வெள்ளம்
போகுவதற்கு ஓடை இருந்தது. 


தற்போது இரு வழி பாதைக்கான தண்டவாளம் அமைப்பதால்
அந்த ஒடை மூடப்பட்டுள்ளது. தற்போது விவசாய பணி துவங்க வேண்டிய காலம் வந்து
விட்டது. 

ஆகவே அந்த ஓடையை உடனடியாக தோண்ட வேண்டும். அப்படி
தோண்டவில்லை
என்றால் ? மழை வெள்ளம் விவசாய நிலத்திற்கு சென்று விவசாயத்தை
அழித்து விடும். 

ஆகவே உடனடியாக அந்த பகுதியில் ஓடை தோண்ட நடவடிக்கை எடுக்க
வேண்டுகிறேன். என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர்
கே.பி ஆறுமுகம்  மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அவர்களிடம் மனு அளித்தார் உடன்
தூத்துக்குடிமாவட்ட
துனை தலைவர் Tசீனிவாசன்
துனை ெசயலாளர்
K சங்கரன்
கடம்பூர் வட்டார தலைவர்
K மாரியப்பன
வட்டார செயலாளர் துரைராஜ் ஆகியோர் வந்திருந்தார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக