வியாழன், 5 செப்டம்பர், 2019

தூத்துக்குடி மாவட்டத்தில் ..வாகன யோட்டிகள் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை!!!


திருச்செந்தூர் காவல்துறை, போக்குவரத்து பிரிவு
புதிய மோட்டார் வாகன சட்டம் 2019ன்படி உயர்த்தப்பட்ட அபராத தொகை விபரம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக திருச்செந்தூர் போக்குவரத்துப்பிரிவு காவல்துறையினர் அறிவிப்பு பலகைகள் மூலம் விழிப்புணர்வு செய்து வருகிறார்கள்.

*புதிய மோட்டார் வாகன சட்டம் 2019இன்படி  பொது அபராதம் (போக்குவரத்து விதிகளை மீறுதல்) ரூபாய் 100/- ஆக இருந்தது ரூபாய் 500/-ம் ஆகவும், போலீஸ் உத்தரவை மீறுவதற்கு ரூபாய் 500/-லிருந்து ரூபாய் 2000/-ம் ஆகவும், உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் ரூபாய் 500/-லிருந்து ரூபாய் 5000/-ம் ஆகவும், தகுதி இல்லாத வாகனம் ஓட்டுவதற்கு ரூபாய் 1000/-லிருந்து ரூபாய் 5000/-ம் ஆகவும், அதிவேகமாக வாகனம் ஓட்டுவதற்கு ரூபாய் 400/-லிருந்து ரூபாய் 2000/-ம் ஆகவும், ஆபத்தாக வாகனத்தை ஓட்டுவதற்கு ரூபாய் 1000/-லிருந்து ரூபாய் 5000/-ம் ஆகவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் ரூபாய் 2000/-லிருந்து ரூபாய் 10,000/-ம் ஆகவும், பந்தயத்தில்(Race) ஈடுபடுவதற்கு ரூபாய் 500/-லிருந்து ரூபாய் 5000/-ம் ஆகவும், பெர்மிட் இல்லாத வாகனம் ஓட்டுவதற்கு ரூபாய் 5000/-லிருந்து ரூபாய் 10,000/-ம் ஆகவும், அதிக பாரம் ஏற்றறுதலுக்கு ரூபாய் 2000/-லிருந்து ரூபாய் 20,000/-ம் ஆகவும், அதிக அளவில் பயணிகளை ஏற்றிதலுக்கு முதலில் அபராதம் இல்லை இப்போது ரூபாய் 1000/-ம் ஆகவும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவதற்கு ரூபாய் 100/-லிருந்து ரூபாய் 1000/-ம் ஆகவும், இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்றால் ரூபாய் 100/-லிருந்து ரூபாய் 1000/-ம் ஆகவும், ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூபாய் 100/-லிருந்து ரூபாய் 1000/-ம் ஆகவும்,   காப்பீடு இல்லாத வாகனம் ஓட்டினால் ரூபாய் 1000/-லிருந்து ரூபாய் 2000/-ம் ஆகவும், சிறார் வாகனம் ஓட்டினால் முதலில் அபராதம் இல்லை இப்போது ரூபாய் 25,000/-ம் ஆகவும், பழைய அபராதத் தொகையில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளது

இந்த அபராதத் தொகை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திருச்செந்தூர் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு. சுடலைமுத்து தலைமையிலான போலீசார் அறிவிப்புபலகைகளில் புதிய மோட்டார் வாகனச்சட்டப்படி ஒவ்வொரு விதிமீறல் வகைகளுக்கும் உயர்த்தப்பட்ட அபராத தொகை மற்றும் பழைய அபராத தொகை ஆகியவற்றை குறிப்பிட்டு திருச்செந்தூர் பேருந்து நிலையம், மெயின் ஆர்ச், அமலிநகர் சந்திப்பு, இரும்பு ஆர்ச் மற்றும் தெப்பகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் மேற்படி அறிவிப்பு  பலகைகள் வைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.*

*இதன் மூலம் பொதுமக்கள் வாகனம் ஓட்டும் போது சாலை போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Next News



*தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி காவல் நிலைய கொலை வழக்கில்
குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 2,500/- அபராதம்
விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - II தீர்ப்பு.*

கடந்த 04.10.2017 அன்று இரவு 09.30 மணிக்கு ஒட்டப்பிடாரம் தாலுகா,
முறம்பன், காலணித் தெருவைச் சேர்ந்த தங்கையா மகன் கோபால்சாமி (60/17)
என்பவரை முன் விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த தங்கப்பழம்
மகன் செந்தூர் (40/19) என்பவர் சவுக்கம் கம்பால் தலை, கழுத்து, வயிறு மற்றும்
பல்வேறு பகுதிகளில் தாக்கியுள்ளார்.

தாக்கியதில் படுகாயமடைந்த கோபால்சாமியை ஓட்டப்பிடாரம் அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் இறந்துவிட்டார்.

இறந்த கோபால்சாமி மகன் சேகர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில்
மணியாச்சி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி இவ்வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்
11வில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட கூடுதல்
அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு. கௌதமன் அவர்கள் குற்றவாளி செந்தூர்
என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூபாய் 2500/- அபராதமும்
விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இதனையடுத்து குற்றவாளி செந்தூர்பாண்டியை போலீசார்
பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர்.

Next News

*தூத்துக்குடி மாவட்டம் : 05.09.2019.*

*தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 2,500 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.*

*கடந்த 04.10.2017 அன்று இரவு  09.30 மணிக்கு ஓட்டப்பிடாரம் தாலுகா, காலணித் தெருவைச் சேர்ந்த தங்கையா மகன் கோபால்சாமி (60/ 17) என்பவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த தங்கப்பழம் மகன் செந்தூர் (40/19) என்பவர் சவுக்கு கம்பால் தலை, கழுத்து வயிறு மற்றும் பல்வேறு பகுதிகளில் தாக்கியுள்ளார்.*

*தாக்கியதில் படுகாயமடைந்த கோபால் சாமியை ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் இறந்துவிட்டார்.*

*இறந்த கோபால்சாமி மகன் சேகர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மணியாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.*

*மேற்படி வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.கௌதமன் அவர்கள்  குற்றவாளி செந்தூர் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 2500 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.*

*இதையடுத்து குற்றவாளி செந்தூர்பாண்டியன் போலீஸார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக