*தூத்துக்குடி சப்-கலெக்டர் திரு. சிம்ரன் ஜித் சிங் கலோன் இ.ஆ.ப. அவர்கள் அதிரடி நடவடிக்கை -
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி குலையன்கரிசல் கருணாகரன் கொலை வழக்கு குற்றவாளிகள் இருவர் தண்டனை கைதிகளாக சிறையில் அடைப்பு.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய சரகம எல்லைக்குட்பட்ட குலையன்கரிசல் கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்த பூலோக பாண்டியன் மகன் இளையராஜா(28/ 19) தெருவை சேர்ந்த முருகேசன் மகன் ரமேஷ் (26/19) ஆகிய இருவரையும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் 107 குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி வழக்கு பதிவு செய்து 18.03.2019 மற்றும் 01.07.2019 ஆகிய இரு நாட்களில் உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் சப்-கலெக்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினார்.*
அப்போது இளையராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் முறையே 18.03.2019 மற்றும் 01.07.2019 அன்றைய தேதியில் சப்-கலெக்டர் முன்னிலையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டோம் எனவும், எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டோம் எனவும் 6 மாத காலத்திற்கு குற்ற விசாரணை முறை நடைமுறைச் சட்டப் பிரிவு 110ன்படி நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்தனர்.*
*அதற்கு ஜாமின் தொகையாக தலா ரூபாய் 5000/- பணமும் செலுத்தி எந்த தொடர் குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என உறுதி அளித்தனர்.*
*ஆறு மாத காலத்திற்குள் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கவோ அல்லது தொடர் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி பத்திரம் எழுதிக்கொடுத்த இளையராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஆறு மாத காலத்திற்குள் 22.07.2019ம் தேதி 17.30 மணிக்கு இருவரும் வன்முறையில் ஈடுபட்டு புதுக்கோட்டை கருணாகரன் என்பவரை கொலை செய்து கொலைக்குற்றம் புரிந்துள்ளனர்.*
*அதனால் இளையராஜா மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. திருமலை அவர்கள் தூத்துக்குடி சப்-கலெக்டர் அவர்களிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.*
*அதனடிப்படையில் மேற்படி இளையராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு நன்னடத்தை பத்திரம் எழுதிக்கொடுத்து நடைமுறையில் இருக்கும் தருவாயில் மீளவும் வன்முறை செயல்களில் ஈடுபட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு பொது மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் உள்ளதாலும், பொதுமக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டியும், எதிர்காலத்தில் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு நல்ல நோக்கத்துடன் மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக பொது அமைதிக்கு பங்கம் நேரக் கூடாது என்பதால் இளையராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு குற்ற விசாரணை முறை சட்டம் 122 (1)(b)யின் படி இளையராஜாவை 17.09. 2019 வரையும், ரமேசை 31.12.2019 வரையும் அல்லது சட்டப்படி வேறு நீதிமன்ற ஆணைப்படி விடுவிக்கப்படும் வரை தண்டனை கைதியாக சிறையில் அடைக்க தூத்துக்குடி சப்-கலெக்டர் திரு. சிம்ரன் ஜித் சிங் கலோன் இ.ஆ.ப. அவர்கள் உத்தரவிட்டார்.*
*உத்தரவின்படி இளையராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தண்டனை கைதிகளாக தூத்துக்குடி மாவட்ட சிறைச்சாலை பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர
![]() |
| சப் கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக