புதன், 4 செப்டம்பர், 2019

திருச்செந்தூர் கடற்கரையில் 13 2 விறாயகர் சிலை கரைப்பு!!!

தூத்துக்குடி மாவட்டம்‌, திருச்செந்தூர்‌ கடற்கைரையில்‌ 132 விநாயகர்‌
சிலைகள்‌ கரைப்பு -


தூத்துக்குடி மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு. அருண்‌
பாலகோபாலன்‌, இ.கா.ப அவர்கள்‌ தலைமையில்‌ சுமார்‌ 600 போலீசார்‌
தலைமையில்‌ பாதுகாப்பு.

இன்று இந்து முன்னணி சார்பாக திருச்செந்தூர்‌ தாலுகாவிலிருந்து 3
சிலைகளும்‌, ஆத்தூரிலிருந்து 3 சிலைகளும்‌ மற்றும்‌ ஆறுமுகநேரியிலிருந்து 32
சிலைகளும்‌ ஊர்வலமாக ஆறுமுகநேரி பஜார்‌, பேயன்விளை, லெட்சுமிபுரம்‌,
ரத்தினபுரி, காயல்பட்டினம்‌ பேரூந்து நிலையம்‌, பூந்தோட்டம்‌, தைக்காபுரம்‌,
ஒடக்கரை, வீரபாண்டியன்பட்டிணம்‌ வழியாக திருச்செந்தூர்‌ கடற்கரை
வந்து 38
சிலைகள்‌ கரைக்கப்படுகிறது.

நாசரேத்திலிருந்து 14 விநாயகர்‌ சிலைகளும்‌, ஆழ்வார்திருநகரியிலிருந்து
1 சிலையும்‌, குரும்பூரிலிருந்து 9 சிலைகளும்‌ ஊர்வலமாக புறப்பட்டு நாசரேத்‌,
பிரகாசபுரம்‌, மூக்குப்பேரி கச்சனாவிளை, நாலுமாவடி, குரும்பூர்‌, ஆறுமுகநேரி
பஜார்‌, காயல்பட்டிணம்‌ வழியாக திருச்செந்தூர்‌ கடற்கரை வந்து 24 சிலைகள்‌
கரைக்கப்படுகிறது.

மெஞ்ஞானபுரத்திலிருந்து 10௦ விநாயகர்‌ சிலைகள்‌ புறப்பட்டு
செட்டியாபத்து, உடன்குடி ராமகிருஷ்ணா பள்ளி வழியாக திருச்செந்தூர்‌
கடற்கரை வந்து கரைக்கப்படுகிறது.

குலசேகரப்பட்டிணத்திலிருந்து 14 விநாயகர்‌ சிலைகள்‌, திருச்செந்தூர்‌
தாலுகாவிலிருந்து 16 சிலைகள்‌, திருச்செந்தூர்‌ கோவில்‌ பகுதியிலிருந்து 1 சிலை
மொத்தம்‌ 31 சிலைகள்‌ புறப்பட்டு உடன்குடி பஜார்‌, சந்தையடியூர்‌, சோமநாதபுரம்‌,
சிவலூர்‌, கொட்டங்காடு, தேரியூர்‌, வைத்திலிங்கபுரம்‌, கிறிஸ்டியாநகரம்‌,
கூலத்தெரு, வடக்கு காலானீகுடியிருப்பு, நடுக்காலான்‌ குடியிருப்பு, உடன்குடி
பேரூந்து நிலையம்‌, வில்லிக்குடியிருப்பு வழியாக திருச்செந்தூர்‌ கடற்கரை வந்து
கரைக்கப்படுகிறது.
சாத்தான்குளத்திலிருந்து 16 விநாயகர்‌ சிலைகள்‌, சேராகுளத்திலிருந்து 1
சிலை தட்டார்மடத்திலிருந்து 10 சிலைகள்‌, நாசரேத்திலிருந்து 1 சிலை,
மெஞ்ஞானபுரத்திலிருந்து 1 சிலை ஆக மொத்தம்‌ 29 சிலைகள்‌ புறப்பட்டு மேல
சாத்தான்ன்குளம்‌, பன்னம்பாறை, மெஞ்ஞானபுரம்‌, பரமன்குறிச்சி,
நடுநாலுமூளைக்கிணறு, ராமசாபிபுரம்‌ வழியாக வந்து திருச்செந்தூர்‌ கடற்கரை
வந்து கரைக்கப்படுகிறது.

இந்த பாதுகாப்பு பணிக்கு 1 காவல்துறை கூடுதல்‌ கண்காணிப்பாளர்‌, 8
காவல்‌ துணை கண்காணிப்பாளர்கள்‌, 31 காவல்‌ ஆய்வாளர்கள்‌, 68 உதவி
ஆய்வாளர்‌ மற்றும்‌ சிறப்பு உதவி ஆய்வாளர்கள்‌, 279 தலைமை காவலர்கள்‌
மற்றும்‌ காவலர்கள்‌ மற்றும்‌ 157 ஆயுதப்படை காவலர்கள்‌, 25 தமிழ்நாடு
சிறப்புக்காவல்‌ படையினர்‌ பாதுகாப்பு பணியில்‌ ஈடுபட்டனர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக