புதன், 4 செப்டம்பர், 2019

தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு!!! கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கொப்பம்பட்டி காவல் நிலைய கொலை வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா

*கொப்பம்பட்டி காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II தீர்ப்பு*

*கோவில்பட்டி, சண்முகாசிகாமணிநகர், 5வது தெருவை சேர்ந்தவர் பாக்கியநாதன் மகன் ராஜா 27/17. இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த A1.முருகேசன் மகன் சக்தி வெங்கடேஷ்(22), A2. ஜேசுராஜ் மகன் அந்தோணிராஜ்(29), A3. கணேசமுருகன் மகன் மாரிமுத்து(24), A4. ஆதிகுபேந்திரன் மகன் தங்கராஜ்(24), மற்றும் A5. ராமர் மகன் சுடலைமணி(27) ஆகியோர் முன்விரோதம் காரணமாக 07.06.2017 அன்று இரவு ராஜாவை அதிகப்படியான மது குடிக்க வைத்ததனர்.*

* பின்பு ஈராட்சி To கசவன்குன்று சாலையில் உள்ள விவசாய நிலத்தில் வைத்து அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி  ராஜாவை கொலை செய்துள்ளனர்.*

* இதுகுறித்து ராஜாவின் அப்பா பாக்கியநாதன் அளித்த புகாரின் பேரில் கொப்பம்பட்டி காவல் நிலைய போலீசார்  வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.*

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் -IIல் நடைபெற்றுவந்தது.*

*இந்நிலையில் 04.09.2019 அன்று வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II நீதிபதி திரு. கவுதமன், குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட A1. சக்தி வெங்கடேஷ் மற்றும் A2.அந்தோணிராஜ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் மற்றும் ரூபாய் 1000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.*

 மேலும் கொலை வழக்கின் மற்ற எதிரிகளான A3. மாரிமுத்து, A4. தங்கராஜ், A5. சுடலைமணி ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.*

Next News

*தூத்துக்குடி மாவட்டம் :04.09.2019*

 முத்தையாபுரம் காவல் நிலையம்.

*முத்தையாபுரம், குமாரசாமிநகர், 3வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பாலகிருஷ்ணன்(53). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.*

* பாலகிருஷ்ணனுக்கு உதவியாளராக முத்தையாபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஜேசுரத்தினம் மகன் ஜோஸ்வா பிரபாகரன்(45) என்பவர் வேலை செய்து வந்தார்.*

*சில நாட்களாக ஜோஷ்வா பிரபாகரன் வேலைக்கு வரும் பொழுது மது அருந்திவிட்டு வந்ததால் பாலகிருஷ்ணன்  வேலைக்கு  கூப்பிடவில்லை. இதனால் ஜோஸ்வா பிரபாகரன், பாலகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் 02.09.2019 அன்று முத்தையாபுரம், தவசிபெருமாள் சாலையில் வைத்து ஜோஸ்வா பிரபாகரன், பாலகிருஷ்ணனை செங்கலால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.*

*இதுகுறித்து  பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராஜபிரபு Cr.no 288/19  U/s 294(b), 324, 506(ii) IPCன் கீழ் வழக்கு பதிவு செய்து ஜோஸ்வா பிரபாகரனை கைது செய்தார்.*

Next

*தூத்துக்குடி மாவட்டம் :04.09.2019*

* தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையம்.*

*தூத்துக்குடி, அழகேசபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் சதாசிவம் மனைவி ராமலட்சுமி(64). இவரது கணவர் சதாசிவத்திற்கு மருத்துவமனை செலவுக்காக தனது ஒரு சென்ட் நிலத்தை விற்பதற்காக புரோக்கரை வரச் சொல்லி  02.09.2019 அன்று நிலத்தை பார்வையிட்டுள்ளார்.*

* இந்நிலையில் ராமலட்சுமியின் மகனான ரவிக்குமார்-48 (S/o சதாசிவம்) என்பவர், 03.09.2019 அன்று ராமலெட்சுமியிடம் தகராறு செய்து நிலத்தை விற்க கூடாது என்று தவறாக பேசிய தகராறு செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.*

* இதுகுறித்து ராமலெட்சுமி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ரவிகுமார் Cr. No 354/19 u/s. 294(b), 506(ii) IPCன் கீழ் வழக்கு பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக