கல்வி உரிமைமீட்புகூட்டியக்கம் சார்பாக
தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அவர்கள் இடம் மனு அளித்தனர்
அம்மனுவில் தெரிவித்திருந்தாவது
பெறுநர்
உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தூத்துக்குடி
பொருள் : தேசிய கல்விக்கொள்கை வரைவு - 2019ஐ மத்திய அரசு முற்றிலும்
கைவிடக் கோரியும் மாநில அரசு முற்றிலும் நிராகரிக்க கோரியும் ..
அன்புடையீர்,
வணக்கம். ஏழை எளிய சாமான்ய மக்களின் கல்விக்கனவை நாசமாக்கும், சமூகஏற்றத்தாழ்வுகளை தீவிரமாக்கும் நமது அரசியல் சாசனத்தின் ஆன்மாவாக உள்ள சமத்துவம்,
மதச்சார்பின்மை, இறையாண்மை போன்ற விழுமியங்கள் பாதிக்கப்பட்டு, மக்களின் ஒற்றுமை
சீர்குலைய வழி வகுக்கும் தேசிய கல்விக்கொள்கை வரைவு - 2019 முற்றிலும் கைவிடக் கோரி
கீழ்க்கண்ட கோரிக்கைகள் மீது மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவலியுறுத்துகிறோம்.
கோரிக்கைகள்குழந்தைகளின் அடிப்படை உரிமையான கல்வி உரிமையினை பறித்து நவீன தீண்டாமைக்கும்,
நவீன குலவழிக் கல்விக்கும் வழிவகுக்கும், சமூக ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும், சமூக நீதிக்கு
எதிரான கடட்டாட்சி தத்துவத்திற்கு மிகப் பெரும் அபாயத்தை ஏற்படுத்த உள்ள தேசியகல்விக்கொள்கை வரைவு 2019-ஐ மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும்.
தமிழக அரசு தேசிய கல்விக்கொள்கை வரைவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் 5மற்றும் 8 வகுப்புகளுக்கு தேர்வு என்னும் நிலைப்பாட்டினை தற்காலிகமாக 3 ஆண்டுகளுக்கு
மட்டுமே நிறுத்தி வைக்காமல் நிரந்தரமாக கைவிட நடவடிக்கை எடுப்பதுடன் மத்திய அரசின்
தேசிய கல்விக்கொள்கை வரைவு 2019-ஐ முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.
: பள்ளிக் கல்வி என்பது மத்திய அரசின் ஒத்திசைவுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்குமீண்டும் மாற்றப்பட்டு கூட்டாட்சித் தத்துவம் உறுதி பெற வகுக்கப்பட வேண்டும்.
இப்படிக்கு,
கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம்
தூத்துக்குடி
நகல்:
1) மாண்புமிகு பிரதமர் அவர்கள், இந்திய அரசு,
சவுத் பிளாக், ரெய்சினா கில், புதுடெல்லி
2) மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை -600 009.
3) மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள்,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை -600 009.
தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 என்பது ஏதோ யாருக்கோ அல்ல..
நம் பிள்ளைகளுக்கு மூன்று வயது முதல் கல்லூரி முடித்து ஆராய்ச்சி செய்யும் வரையில் கல்வி எப்படி
கொடுக்கப்படும் என்பதற்கான ஒரு கட்டமைப்பு.
சரி, ஒரு பெற்றோராக இதில் எங்கெல்லாம் பாதிக்கப்படுவோம். நமக்கான முக்கிய புள்ளிகள் என் ?
பள்ளிக் கல்வி 10+2 என்பதற்கு பதிலாக 543+3+4 என நான்கு வகைக் கல்வி படிப்படியாகவழங்கப்படும்.
அங்கன்வாடி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒரே வளாகத்திலோ அல்லது பத்து மைல்
சுற்றளவிலோ உள்ள பள்ளிகள் இணைந்த பள்ளித் தொகுதிகளாக மாற்றப்படும்.
3, 5, 8ம் வகுப்புகளுக்கு தேசிய அளவில் பொதுத் தேர்வு (குழந்தைகளுக்கு மிகப்பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தும்)
தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் நிர்ணயித்து
கொள்ளலாம். அரசு தலையிடாது.
ஒன்பது முதல் பன்னிரெண்டு வரை எட்டு செமஸ்டர்களாக சுமார் 40 தாள்களுக்குத் தேர்வு
நடத்தப்படும். (மேல்நிலைப் பள்ளியில் பெற்ற மதிப்பெண்கள் உயர்கல்விக்கு உதவாது.)
அரசுப் பள்ளிகளில் குறைவான மாணவர்கள் இருந்தால் அவைகள் மூடப்பட்டு வேறு
பள்ளிகளுடன் இணைக்கப்படும்.
எட்டாம் வகுப்பு முதலே துணைப்பாடமாக தொழிலா சார் கல்வி கட்டாயமாக்கப்படும்.
நம் குழந்தைகள் பள்ளி முடித்துவிட்டுக் கல்லூரிக்கு இனி எளிதாக சென்று விடமுடியாது NTA
(National Testing Agency) மூலம் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவு தேர்வினை எழுதி அதில்
தேர்ச்சி பெற்றால் மட்டுமே கல்லூரிக்குள் நுழைய முடியும். (இந்த தேர்வுகள் அரசு நடத்தாது.
தனியார் அமைப்புகளிடம் விடப்படும்)
ஏற்கனவே பத்தாம் வகுப்பு - பனிரெண்டாம் வகுப்பு இடைநிற்றல் அதிகம். 12ம் வகுப்பு -
கல்லூரிகள் இன்னும் அதிகம். நுழைவுத் தேர்வு மூலம் கல்லூரியில் சேரும் Procedure கள்
மூலம் இன்னும் இடைநிற்றலை அதிகரிக்கும்.
50,000 கல்லூரிகள் 15 ஆயிரமாக குறைக்கப்படும்
மாங்கு மாங்கு என விடியற்காலை எழுந்து டீ காபி போட்டு படிக்க வைத்த மேல்நிலை
சான்றிதழுக்கு (+2) இனி எந்த பயனும் இல்லை .
டியூசன் / கோச்சிங் சென்டருக்கு கட்ட இப்போதே வைப்பு நிதி லோன் போட்டு வைக்கவும்.
சமஸ்கிருதம் கட்டாயம் கற்றுத் தரப்படும். ஆகவே விரைவில் சமஸ்கிருதப் புத்தகம் வாங்கவும்,
பத்து ஆண்டுகளுக்குள் தானாக டிகிரி வழங்காத கல்லூரிகள் பல்கலைக்கழகங்களுடன்
இணைக்கப்பட்டு விடும். அந்தக் கல்லூரிகள் நூலக வளாகமாகவோ, தொழிற்பயிற்சி
வளாகமாகவோ மாற்றப்படும். (எதுக்கும் நீங்க படிச்ச கல்லூரிகளை ஒரு முறை பார்த்து விட்டு
வந்துவிடுவது நல்லது)
தமிழ்நாடு அரசு பின்பற்றும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதற்கு எந்த உத்தரவாதமும்
கிடையாது.
பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஆகியவற்றிற்கு உயர்கல்வி, தொழிற்கல்வி ஆகிய அனைத்திற்கும்
இனி அனைத்திந்திய நுழைவுத்தேர்வுதான் உண்டு என்றும், அதற்கு தேசிய தேர்வு முகமை
(National Testing Agency - NTA) உருவாக்கப்படுவதாகவும் இந்த கல்வி கொள்கை
வரையறுக்கிறது.
இனி பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம் டிப்ளமோ படிப்புகள் தொடங்கி மருத்துவம், பொறியில், சட்டம்
உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வுதான் நடத்தப்படும்.
அதையும் இந்திய அரசின் தேர்வு முகமைதான் நடத்தும்.
கல்லரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் இனி மாநில அரசுக்கு
இல்லை. அது மட்டுமல்ல. அதன் பாடத்திட்டத்திலும் மாநில அரசு தலையிடமுடியாது.
அதற்கென்று பொதுக்கல்விக் குழு (புநநெசயட நுனரஉயவழை ெஊழரஉெடை) என்ற ஒன்று
நிறுவப்படும்.
RSA - Rashtriya Shiksha Aayog (தேசிய கல்வி ஆணையம்) பிரதமர் கட்டுப்பாட்டின் கீழ்
அமைக்கப்படும் குழுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்.
இன்னும் இன்னும் நிறைய விஷயங்கள் இந்த கல்விக் கொள்கையில் இருக்கு.
இதனை சாமான்ய மனிதர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம் ?
ஆனால் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி கல்வி பற்றிய புரிதலை நமக்குள் விதைக்கவேண்டும்.
இது கட்டாயம் நிறைவேறும். அப்படி நிறைவேற்றினால் நாம் என்ன செய்ய போகிறோம்.. ?
மிக முக்கியமாக இது சமமற்ற ஒரு களத்தினை உருவாக்கும் முயற்சி..
சிலர் வளர்ந்து நல்ல நிலையில் இருக்கலாம்..
சிலர் இன்னும் எழக் கூட முடியாமல் இருக்கலாம்..
இந்த புதிய கல்வி கொள்கை சமூக பிளவினை மேலும் மேலும் அதிகரிக்க செய்யும்.
அதற்காகவேனும் நாம் கைகோர்க்க வேண்டும்.
விவாதிப்போம்..
புரிந்துக்கொள்வோம்...
ஒன்றாய் கைகோர்த்து பயணிப்போம்...
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.
ஃ கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம்
தூத்துக்குடி
9487838297, 877889600, 9488478955, 9865587441, 9788693295, 9952293678
இவ்வாறு மனுவில தெரிவித்து இருந்தனர்
thoothukudi leaks
23-09-2019
time 12.55pm

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக