வியாழன், 19 செப்டம்பர், 2019

தூத்துக்குடி மாவட்டத்தில் ..காவல்துறை ஆய்வு கூட்டம்!!!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலககூட்ட அரங்கில் ...
திருநெல்வேலி சரக துனைத் தலைவர் திரு. பிரவீண்குமார்
அபிநபு இ.கா.ப அவர்கள் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு
அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் முன்னிலையில் காவல்துறைஅதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம்
19-09-2019  நடைபெற்றது.

       இதில் காவல் ஆய்வாளர்கள் 

6 பேர் உட்பட 53 காவல்துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திருபிரவீண்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.


கடந்த 21.08.2019 அன்று அதிகாலை

 3 மணியளவில் லோடு வேனில்
கஞ்சா கடத்தியவரை கைது செய்து, வேனிலிருந்த 294 கிலோ கஞ்சாவை
பறிமுதல் செய்து சிறப்பாக பணியாற்றிய ஆத்தூர் காவல் நிலைய காவல்ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், தலைமை
மாரிமுத்துக்குமார், காவலர்கள் பாக்கியராஜ், சோமசுந்தரம் மற்றும் பெண் முதல்நிலை காவலர் பரணி ஆகியோரையும் ..


கடந்த 15.09.2019 அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட

பகுதியில் நடைபெற்ற முருகேசன் மற்றும் விவேக் கொலை வழக்கில் சம்பவம்நடந்த அரை மணி நேரத்தில், அதில் ஈடுபட்ட எதிரி மாரிமுத்து என்பவரைதுரிதமாக செயல்பட்டு கைது செய்த தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர்தங்கக் கிருஷ்ணன், தலைைமைகாவலர்கள் ராஜ்குமார்
காவலர் முத்துராஜ், காவலர்கள்பாலகுமார்
மாதவன் ஆகியோரையும் ....


அதே போன்று 31.08.2019 அன்று லைலா என்ற பாத்திமாவை கைது

செய்து, அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தமைக்காக
தாளமுத்துநகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தங்கக்கிருஷ்ணன், தலைமைகாவலர் திருமலைராஜன், காவலர்கள் சுந்தர் சிங், பன்னீர் செல்வம்ஆகியோரையும் ....


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வல

பாதுகாப்பு பணியை எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல்
 சிறப்பாகபணியாற்றி
ஆறுமுகநேரிகாவல்ஆய்வாளர் பத்திரகாளி என்ற பவுன் மற்றும்
குலசேகரப்பட்டினம் காவல் ஆய்வாளர் ராதா ஆகியோரையும் ...

திருடப்பட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள டாரஸ் லாரியை மீட்டு எதிரியை

கைது செய்த வழக்கில் சிறப்பாக பணியாற்றியமைக்காக விளாத்திக்குளம் காவல்ஆய்வாளர் பத்மநாப பிள்ளை தலைமை காவலர்கள் சுடலைமுத்து, வடிவேல்
மாடசாமி, செல்வ கிருஷ்ணன், கதிர்வேல் ஆகியோரையும்
நிலமோசடி வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது
செய்தமைக்காக காவல் ஆய்வாளர் அருள் ரோஸ் சிங், சார்பு ஆய்வாளர்
நாராயணன், தலைமை காவலர் மாரிக்குமார், மாணிக்ககுமார்ஆகியோரையும் .....


வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கு எதிரி பாக்குஅந்தோணி நீண்ட நாட்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனணைக்கு ஆஜராகாமல்

இருந்து வந்த பாக்கு அந்தோணியை கைது செய்தமைக்காக எஸ்.ஐ.ரவிக்குமார்
தலைமை காவலர்கள் பிச்சையா, அருணாச்சலம், ராஜேஷ் ஆகியோரையும் ...



மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜிந்தா சரணவன் கொலைவழக்கு எதிரிகள் ஜான்சன், மதன்ராஜ் மற்றும் மாரிச்செல்வம் ஆகியோரை கைது
செய்தமைக்காக எஸ்.ஐ. சங்கர், முதல் நிலைக்காவலர் பென்சிங்ஆகியோரையும், ...



மற்றும் இதர வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய ஹென்சன் பால்ராஜ்,

ஞானராஜ், ராஜாமணி, சிவராஜன், போக்குவரத்துப்பிரிவு எஸ்.ஐவெங்கடேசன்,
கோவில்பட்டி கிழக்குப்பிரிவு எஸ்.ஐநாராயணசாமி,
தலைமை காவலர்கள் பரணி
கைலயங்கிரி வாசன், பெருமாள், ஸ்ரீராம், மணிகண்டன், முருகேசன்
செல்லப்பாண்டி, லெனின் கிங்ஸ்லி, கார்த்திகேயன், நம்பிராஜன், முருகன்,
சக்திவேல் மற்றும் பிள்ளைமுத்து ஆகியோரையும் பாராட்டினார்.

இக்கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. குமார்

காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் திரு. பிரகாஷ்
தூத்துக்குடி ஊரகம் திரு.கலைக்கதிரவன், 
ஸ்ரீவைகுண்டம் திரு.சுரேஷ்குமார்
சாத்தான்குளம் திரு. பால்துரை, விளாத்திக்கும் திரு. நாகராஜன், மணியாச்சிதிரு. ஜெயச்சந்திரன், கோவிலபட்டி திரு. ஜெபராஜ், மாவட்ட குற்றப்பிரிவு திருபெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், நில மோசடி தடுப்பு பிரிவு திரு.பிரதாபன், மாவட்ட
தனிப்பரிவு காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன், எஸ்.ஐக்கள்உமையொருபாகம்
மற்றும் கிறிஸ்டி ஆகியோர் கலந்து கொண்டார்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக