வியாழன், 12 செப்டம்பர், 2019

டூவிலரில் சென்ற இளைஞர் வெட்டி கொலை!!! தூத்துக்குடி அருகே பதற்றம்!!! சாலை மறியலில் இறங்கிய மக்கள்!!!

டூவீலரில் சென்ற இளைஞர் ஜ  பாலத்தில் வழிமறித்து 5 பேர் கெnண்ட மர்ம கும்பல் வெட்டிக்கொலை !!!

தூத்துக்குடி அருகே நாணல்காடு பகுதியில் இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே நாணல்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் இசக்கிபாண்டி (27). இவர் இன்று இரவு சுமார் 7 மணியளவில் நாணல்காடு பகுதியில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் இசக்கிபாண்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே இசக்கிபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.முன் விரோதம் காரணமாக இக்கொலை நடைபெற்ற தாக தெரிய வருகிறது

இது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அருண்பாலகோபாலன்,
தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி கலைச்செல்வன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றன்ர் இதனால் பதட்டம், பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் தற்போது அங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக