வியாழன், 12 செப்டம்பர், 2019

தூத்துக்குடியில் கிறிஸ்துவ பாதிரியார் வீட்டில் திருடிய பெண் ைகைது !!! 11 சவரன் நகை மீட்பு !!!

தூத்துக்குடி மாநகராட்சி முத்தையாபுரம் அம்பேத்கர் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி மகன் சாமுவேல் ஜெயசீலன்- (வயது51) கிறிஸ்துவ பாதிரியார் ஆக இருந்து வருகிறார்
(CSI Church Pastor). 


இவரின் வீட்டில் திருநெல்   ேவலி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த முத்து என்பவரது மனைவி லட்சுமி(42) என்பவர் கடந்த 1½ மாதங்களாக வீட்டு வேலை செய்து வருகிறார்

 இந்நிலையில் 10.09.2019 அன்று சாமுவேல் ஜெயசீலன் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார்.


அப்போது வீட்டின் பீரோவில் இருந்த  ரூபாய் 1,20,000/- மதிப்புள்ள 11 சவரன் தங்க நகைகளை லட்சுமி திருடியுள்ளார்.

 இதுகுறித்து சாமுவேல் ஜெயசீலன் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராஜபிரபு  வழக்குப்பதிவு செய்து லட்சுமியை கைது செய்தார். மேலும் திருடப்பட்ட 11 சவரன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது


Next news

தூத்துக்குடி மாவட்டம் :12.09.2019

 தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம்*

 தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் அசோக்குமார்(31). இவரிடம் 11.09.2019 அன்று தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மாரிமுத்து(22) மற்றும் தூத்துக்குடி S.S பிள்ளை தெருவை சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து(22) ஆகியோர் முத்து கிருஷ்ணாபுரத்தில் உள்ள டாஸ்மாக் முன்பு வைத்து மது அருந்த பணம் தருமாறு கேட்டுள்ளனர்

 இதற்கு அசோக்குமார் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் மாரிமுத்து மற்றும் மற்றொரு மாரிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து அசோக்குமாரிடம் தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அசோக்குமார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம் வழக்கு பதிவு செய்து மாரிமுத்து மற்றும் மற்றொரு மாரிமுத்துவையும் கைது செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக