தூத்துக்குடி வெற்றிவேல் புரத்தில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக 5 பேர் கைது!!!
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம் தலைமையிலான போலீசார் 09.09.2019 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திரேஸ்புரம் மாதவ நாயர் காலனி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற தூத்துக்குடி சாமுவேல்புரத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் மகன் டேனியல்ராஜ் @ டேனி(20), தூத்துக்குடி, ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த ஸ்டான்லி என்பவரது மகன்கள் சாம் ஜோஸ்வா(20) மற்றும் ஜாய்சன் (18), தூத்துக்குடி, பூபால்ராயர்புரத்தைச் சேர்ந்த அய்யாதுரை கென்னடி மகன் சிம்சன் ஜெனிஸ் ராஜா(25), மற்றும் தூத்துக்குடி, சங்குகுழி காலனியைச் சேர்ந்த விர்ஜின் மகன் ஆண்டோ ஜோசப் ஜேசுராஜ்(21) ஆகிய ஐந்து பேரை விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி வெற்றிவேல்புரத்தில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரிய வந்தது.
*இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பார்த்திபன் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தார்.
Next News
தூத்துக்குடி மாவட்டம் :10.09.2019
சூரங்குடி காவல் நிலையம்
சூரங்குடி, குஞ்சய்யாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் தங்கவேல்(55). இவருக்கும் இவரின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவரது மனைவி மான்தேவி(80) என்பவருக்கும் சொத்து பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தங்கவேல் பிரச்சினையில் உள்ள 1½ ஏக்கர் நிலத்தை தனது பெயரில் பட்டா மாற்றி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விற்றுள்ளார். இதனையடுத்து மான்தேவி பிரச்சனையில் உள்ள நிலத்தின் சொத்தில் பங்கு தருமாறு தங்கவேலிடம் கேட்டுள்ளார். இதற்கு தங்கவேல் 5000/- ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார்.
இதற்கு மான்தேவி மறுத்துள்ளார். 08.09.2019 அன்று இதனால் ஏற்பட்ட தகராறில் தங்கவேல் மற்றும் அவரது மகன் பழனி(30) ஆகியோர் சேர்ந்து மான்தேவி மற்றும் அவரது மகன் கோட்டைபாண்டி(52) என்பவரையும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது கோட்டைச்சாமி குடிபோதையில் தங்கசாமியிடம் தவறாக பேசி கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மான்தேவியின் மகள் மேல்மந்தையை சேர்ந்த முனியம்மாள்(55) என்பவர் அளித்த புகாரின் பேரில் சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தும், தங்கவேல் அளித்த புகாரின் பேரில்(Counter Case) வழக்குப்பதிவு செய்து கோட்டைபாண்டியையும் கைது செய்தார்.
Next News
தூத்துக்குடி மாவட்டம் :10.09.2019*
கயத்தாறு காவல் நிலையம்*
கயத்தாறு, தலயல் நடந்தான்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார்(40), இவரது மனைவி பாக்கியலட்சுமி(38). செல்வகுமார் என்பவர் தினமும் மது போதையில் பாக்கியலட்சுமியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாக்கியலட்சுமியின் தந்தை தனது நிலத்தை காற்றாலை நிறுவனத்திற்கு விற்றுள்ளார். இதனால் செல்வகுமார் பாக்கிலட்சுமியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதற்கு பாக்கியலட்சுமி மறுத்துள்ளார்.*
இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் 07.09.2019 அன்று பாக்கியலட்சுமியின் வாயில் விஷத்தை ஊற்றி வீட்டின் அறையின் உள்ளே தள்ளி கதவை மூடி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பாக்கியலட்சுமி தனது பெற்றோருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். உடனே பாக்கியலட்சுமியின் பெற்றோர் வந்து அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக