புதன், 11 செப்டம்பர், 2019

பள்ளி விரிவாக்கத்திற்கு தனது 3 ஏக்கர் நிலத்தை தானமாக கொாடுத்த தூத்துக்குடி மாவட்ட விவசாயி!!!

தூத்துக்குடி எட்டைை யாபுரம் தாலுகா மேலக்கரந்தை திராமத்தில் உள்ள புதூர் யூனியன் ஊராட்சி நடுநிலை பள்ளி 8ம் வகுப்பு வரை உள்ளது 

அதை 10, 11, வகுப்பு வரை விரிவாக்கம் செய்கிறார்கள்
இந்த பள்ளி விரிவாக்க த்திற்கு எட்டையாபுரம் மேல கரந்தை சீனிவாசன் மகன் பெருமாள் சாமி நாயக்கர் விவசாயி அப்பகுதியில் தனக்கு சொந்தமான
10 ஏக்கர் நிலத்தில் பள்ளிக்காக 3 ஏக்கர் நிலத்தை தானம் தர முன்வந்துள்ளார்.
   
இதுகுறித்து தூத்துக்குடி கலெக்டர் சந்திப் நந்தூரி அவர்களை 9-09-2019 சந்தித்து தனது 3 ஏக்கர் நிலத்தை  பட்டா எண் 1837 -ல் புல எண் 77 | 1 ல் உள்ள பரப்பு 1.3750 ஐ நன்கொடையாகவும் தானமாகவும்  பெற்று  கொள்ளுமாறு கேட்டு கெnண்டுள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி லீக்ஸ் - க்காக    திரு - பெருமாள் சாமி நாயக்கர்  அவர்கள் நம்மிடம் பேசியதாவது :-
தனது அம்மா M K P அக்கம்மாள் அவர்கள்
 பள்ளி விரிவாக்கம் செய்ய 3 ஏக்கர் தானம் வழங்க விரும்பியதாகவும் அம்மா வின் விருப்பத்தை  நிறைவேற்ற த்தான் இன்று தூத்துக்குடி கலெக்டர் ஐ சந்தித்து இது பற்றி பேசியதாக  தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக