சுதந்திர போராட்ட தியாகி 'தென்னாட்டு வேங்கை
திருA.S. பெஞ்சமின்அவர்களது
'100வது பிறந்த தின விழா
(23-08-1919 - 23.08.2019)
சுதந்திர போராட்ட தியாகி
திரு.A.S.பெஞ்சமின்
அவர்கள் 20.09.1942 அன்று
குலசேகரன்பட்டிணத்தில்
ஆங்கிலேய அதிகாரி
லோன் துரையை கொலை
செய்த வழக்கில் ஆங்கிலேய
அரசால் மூன்று ஆயுள்
தண்டனை பெற்றவர் ஆவார்.
அன்னாரை கெளரவிக்கும்
பொருட்டு தியாகி
திரு. A.S.பெஞ்சமின் அவர்களின்
மனைவி பெட்லா அவர்களை
15.08.2019ம் தேதி அன்று
தூத்துக்குடியில்
நடைபெற்ற
சுதந்திர தின விழாவில்
மாவட்ட ஆட்சித்தலைவர்
சந்தீப் நந்தூரி அவர்கள்
பொன்னாடை அணிவித்து
கெளரவித்தார்.
அமரர் தியாகி பெஞ்சமின்
அவர்களின் 100வது
பிறந்த நாளை முன்னிட்டு
அமலி நகர் அமலி மாதா
தேவாலயத்தில் இன்று 23-08- 2019
காலை 6.30 மணிக்கு
சிறப்பு திருப்பலி
நடைபெற்றது
இதில் தியாகி பெஞ்சமின் மனைவி : திருமதி. பெட்லா அம்மையார் அவர்களுடன் அமலிநகர்
'L.P.விமல்சன் - செல்வம்
புன்னைக்காயல் அவரது முத்த மகன் அசோகன் தியாகி பெஞ்சமின் குடும்பத்தினர் அனைவரோடும் அப்பகுதி மக்கள் பெருமளவு கலந்து கொண்டு தியாகி பெஞ்சமின் நூற்றாண்டு பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக