வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

தூத்துக்குடியில் வாலிபரை கடத்தி கொலை செய்ய துரத்திய கோஷ்டி!!! கொலை தடுத்து கூண்டோடு பிடித்த அதிரடி போலீசார் !!! தூத்துக்குடி எஸ்.பி அருண் பால கோபாலன் பாராட்டு !!;;

தூத்துக்குடியில் வாலிபரை கடத்தி  கொலை செய்ய துரத்திய   கோஷ்டி!!!
கொலை தடுத்து கூண்டோடு   பிடித்த அதிரடி போலீசார் !!!
தூத்துக்குடி எஸ்.பி அருண் பால கோபாலன் பாராட்டு !!;;


கொலை செய்வதற்காக கடத்தப்பட்டவரை துரிதமாக செயல்பட்டு
காப்பாற்றி, கைது செய்த காவல்துறையினரை தூத்துக்குடி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன்,
இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.

விருதுநகர் மாவட்டம், கள்ளிக்குடி மேல உப்பிலிகுண்டு ஊரைச்சேர்ந்த
லிங்கம் மகன் நாகராஜ் (24) என்பவர் தங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார்,
ரமேஷ், மருது என்ற மாயா, பாலமுருகன் உட்பட 30 பேர் திருச்செந்தூர்
முருகன் கோவிலுக்கு கடந்த 16.08.2019 அன்று பாதயாத்திரை கிளம்பி,
அங்கங்கே தங்கி நேற்று (19.08.2019) இரவு முத்தையாபுரம் எம். சவேரியார்புரம்
வடபத்திரகாளியம்மன் கோவிலில் தங்கிவிட்டு, இன்று (20.08.2019) அதிகாலை
03.00 மணியளவில் திருசெந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர்.
அவ்வாறு செல்லும்போது பொட்டல் காடு விலக்கு அருகிலுள்ள பழைய
சிமெண்ட் குடோன் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த
இனம் தெரியான 2 நபர்கள், மேற்படி நாகராஜை மடக்கிப்பிடித்து, தர, தரவென
இழுத்துச்சென்று பிவிசி பைப்பால் தாக்கியுள்ளனர், நாகராஜீடன் வந்த
பாலமுருகன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தடுக்கச் சென்றிருக்கின்றனர்.
அவர்களையும் மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர்.
பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த TN 64 T 3748 என்ற எண்ணுள்ள
காரிலிருந்து இறங்கி வந்த நாகராஜ் ஊரைச்சேர்ந்த மற்றொரு பாலமுருகன் என்ற
அடபாலுவும், அவனுடன் வந்த 3 பேரும் நாகராஜிடம் நந்தினியை எங்கடா என்று
அசிங்கமான வார்த்தைகளால் பேசி காருக்குள் போட்டு கடத்திச் சென்றனர்.
இது குறித்து நாகராஜுடன் வந்த விஜயகுமார் காவல் கட்டுப்பாட்டு
அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறை
மூலம் காரில் கடத்தப்பட்ட விபரம் உடனடியாக அனைத்து
காவல்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தூத்துக்குடி நகர காவல்
துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில்முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் திரு. சிவசெந்தில்குமார், எஸ்.ஜ ராஜகுரு
மற்றும் போலீசார் அவர்களை பிடிக்க ஒவ்வொரு குழுவாக விரைந்தனர்.
பின் காவல்துறையினர் கடத்திய காரை அருப்புக்கோட்டை அருகே
மடக்கிப்பிடித்து, காயங்களுடனிருந்த நாகராஜை மீட்டு விருதுநகர் அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்துள்ளனர். காரிலிருந்த மதுரை,
சொட்டான்தட்டி முருகன் மகன் பிரகாஷ் (29), பிரகாஷ் தம்பி ராமச்சந்திரன் (27),
ஆண்டி மகன் விஜய் (22) மற்றும் பாலு மகன் வினோத் (19) ஆகியோரை கைது
செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல்
செய்துள்ளனர். இதில் பாலமுருகன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும்
இடையில் இறங்கியிருக்கின்றனர்.
விசாரணையில் கடத்தப்பட்ட நாகராஜிக்கும், பாலமுருகன் என்ற அடபாலு
மனைவி நந்தினிக்கும் (24) கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இது குறித்து
பலமுறை பிரச்சனை ஏற்பட்டு ஊரில் பஞ்சாயத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே
நாகராஜ் மீது ஆத்திரம் அடைந்த பாலமுருகன் என்ற அடபாலு, நாகராஜை
கொலை செய்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் கடத்தப்பட்டதாக விபரம்
தெரியவந்தது.
இது குறித்து நாகராஜிடன் பாதயாத்திரை வந்த மேல உப்பிலிகுண்டு
மகாலிங்கம் மகன் விஜயகுமார் (27) என்பவர் கொடுத்த புகாரின் பேரில்
முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
உடனடியாக விரைந்து செயல்பட்டு நாகராஜ் உயிரைக் காப்பாற்றி,
எதிரிகளை கைது செய்த காவல்துறையினரை தூத்துக்குடி மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக