தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் நடைபெற்ற மாபெரும்
பல்நோக்கு மருத்துவ முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி துவக்கி
வைத்தார்.
மதுரை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் காயல்பட்டினம் அனைத்து
சமுதாய கூட்டமைப்பு இணைந்து இன்று (25.08.2019) காயல்பட்டினத்தில்
கூலக்கடை பஜார் எல்.கே மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும்
பல்நோக்கு மருத்துவ முகாம் நடத்தினர்.
இந்த மருத்துவ முகாமில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு
இலவசமாக இரத்த அழுத்தம், இரத்தத்தின் சர்க்கரை அளவு, இ.சி.ஜி
மற்றும் எக்கோ போன்ற சோதனைகள் செய்து கொண்டனர்.
அதே போன்று இருதய சிகிச்சை, பெண்கள் நல மருத்துவம்,
குழந்தைகள் நலம், பொது நலம், நுரையீரல் சிகிச்சை , காது, மூக்கு மற்றும்
தொண்டை, மூட்டு மற்றும் எலும்பு மருத்துவ சிகிச்சை குறித்து
ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனை பொது மேலாளர் திரு.சாமுவேல்,
காயல்பட்டிணம் அனைத்து சமூதாய ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சாலை
சலீம், திரு.கண்ணன், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் திரு.
அருண் பிரபு கணேசன், திரு. அழகப்பன், திரு. சன்னதி, ஆறுமுகனேரி
காவல் ஆய்வாளர் செல்வி. பத்திரகாளி என்ற பவுன், தனிப்பிரிவு தலைமை
காவலர் திரு. ராஜா, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து
கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக